- Home
- Gallery
- மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினிகாந்த்... சவுரவ் கங்குலியின் பயோபிக்கில் சூப்பர்ஸ்டார்?
மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினிகாந்த்... சவுரவ் கங்குலியின் பயோபிக்கில் சூப்பர்ஸ்டார்?
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இளைய மகள் செளந்தர்யா இயக்க உள்ள சவுரவ் கங்குலியின் பயோபிக்கில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வேட்டையன் படம் உருவாகி வருகிறது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
Soundarya Rajinikanth
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... அம்பானி மகன் திருமண விழா... ஜம்முனு பேமிலியோடு வந்து கலந்துகொண்ட ரஜினிகாந்த் - மாஸ் லுக் போட்டோஸ் இதோ
Sourav Ganguly
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள மற்றொரு படம் குறித்த ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நடியவாலா உடன் சந்திப்பு மேற்கொண்டு அவர் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த படத்தை இயக்கப்போவது ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தானாம். கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.
Rajinikanth cameo in Sourav Ganguly BioPic
இதில் கங்குலியாக பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்க உள்ளாராம். இதற்காக அவர் தற்போது கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் தன்னுடைய மூத்த மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த ரஜினி, தற்போது இளைய மகள் படத்திலும் அதேபோல் நடிக்க உள்ளாராம். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஜாம்நகரில் ஜாம் ஜாம்னு நடந்து முடிந்த ப்ரீ வெட்டிங் விழா! அம்பானி மகனை வாழ்த்த படையெடுத்து வந்த பாலிவுட் Stars