பருத்திவீரன் முத்தழகா இது... ஃபேண்ட் ஷர்ட்டில் பேஷன் குயினாக மாறிய பிரியாமணியின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ
ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடித்த நடிகை பிரியாமணி அப்படத்தின் புரமோஷனுக்காக அணிந்த உடையில் எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
priyamani
12-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியாமணி. இவரை முதன்முதலில் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அவர் இயக்கிய கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிரியாமணிக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.
Actress priyamani
பாரதிராஜாவை தொடர்ந்து பாலுமகேந்திரா உடன் பணியாற்றினார் பிரியாமணி, அவர் இயக்கிய அது ஒரு கனா காலம் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி முதல் இரண்டு படத்திலேயே தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களுடன் பணியாற்றியதால் பிரபலமானார் பிரியாமணி.
priyamani hot photos
அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பருத்துவீரன் தான். அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தழகு என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் பிரியாமணி. இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Jawan Actress priyamani
பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக மாறிய பிரியாமணி தமிழிலும் அவ்வப்போது நடித்து வந்தார். மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்துக்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது.
priyamani photoshoot
முஸ்தபா என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரியாமணி, திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி.
priyamani Stunning photos
இந்நிலையில், ஜவான் பட புரமோஷனுக்காக அணிந்த உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பிரியாமணி. டைட்டான பேண்ட் ஷர்ட் உடன் செம்ம ஹாட் போஸ் கொடுத்தபடி பிரியாமணி பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஜெயம் ரவி படத்துல நடிக்க வெறும் 400 ரூபா சம்பளம்; செம்ம ஹாப்பியா இருந்தது! விஜய் சேதுபதி சொன்ன ஷாக்கிங் ஸ்டோரி