ஜெயம் ரவி படத்துல நடிக்க வெறும் 400 ரூபா சம்பளம்; செம்ம ஹாப்பியா இருந்தது! விஜய் சேதுபதி சொன்ன ஷாக்கிங் ஸ்டோரி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தான் ஜெயம் ரவி படத்தில் நடித்ததற்காக ரூ.400 சம்பளமாக வாங்கியதாக பிளாஷ்பேக் ஸ்டோரி ஒன்றை கூறி இருக்கிறார்.
vijay sethupathi, jayam ravi
துணை நடிகராக தன்னுடைய கெரியரை தொடங்கி, பின்னர் ஹீரோவாக மாறி தற்போது வில்லனாக பின்னி பெடலெடுத்து வருபவர் தான் விஜய் சேதுபதி. இவர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்னர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதிக்கு சமீபகாலமாக வில்லன் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழில் விஜய், ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துவிட்டார்.
vijay sethupathi
கோலிவுட்டில் கலக்கி வந்த விஜய் சேதுபதியை பாலிவுட்டுக்கு அழைத்து சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கானுக்கே வில்லனாக நடிக்க வைத்து அழகு பார்த்தார். தற்போது பாலிவுட்டிலும் விஜய் சேதுபதிக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி அண்மையில் ஜெயம் ரவியின் இறைவன் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பல சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vijay sethupathi acted in M Kumaran son of mahalakshmi movie
அதில் ஒன்று தான் 400 ரூபாய் சம்பள மேட்டர். விஜய் சேதுபதி ஹீரோவாகும் உன் ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். அப்படி ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திலும் விஜய் சேதுபதி துணை நடிகராக நடித்திருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் ரூ.400 சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதற்கு முன்னர் வரை ரூ.200 சம்பளமாக வாங்கி வந்த தனக்கு அப்படத்தில் தான் 400 ரூபாய் சம்பளமாக கிடைத்ததால் செம்ம ஹாப்பியாக இருந்ததாக விஜய் சேதுபதி கூறினார்.
vijay sethupathi at iraivan pre release event
இதுதவிர ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது குறித்தும் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார் விஜய் சேதுபதி. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான போகன் படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியை தான் அணுகினார்களாம். அந்த சமயத்தில் வேறு படத்தில் பிசியாக இருந்த காரணத்தால், இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக விஜய் சேதுபதி கூறினார். பின்னர் தான் அவருக்கு பதில் அரவிந்த் சாமி அப்படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பப்ளி பாய்ஸ் பர்த்டே... மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் மாஸாக கொண்டாடிய விக்கி-நயன்! வைரலாகும் போட்டோஸ்