பப்ளி பாய்ஸ் பர்த்டே... மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் மாஸாக கொண்டாடிய விக்கி-நயன்! வைரலாகும் போட்டோஸ்
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்கள் மகன்களின் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
nayanthara vignesh shivan sons
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, கடந்தாண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்.
uyir and ulag
திருமணம் முடிந்த நான்கு மாதத்திலேயே தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் விக்கி நயன் ஜோடி. இதைப்பார்த்து எப்புட்ரா என ரசிகர்கள் ஷாக் ஆகினர். பின்னர் தான் அவர்கள் இருவரும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.
uyir and ulag 1st birthday
இதையடுத்து சினிமாவை சற்று ஓரம்கட்டிவிட்டு குழந்தையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்த இந்த ஜோடி, கடந்த ஓராண்டாகவே குழந்தைகளின் முகத்தை வெளியுலகத்துக்கு காட்டாமல் இருந்து வந்தனர். கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த நயன்தாரா, முதன்முறையாக தன் மகன்களின் முகத்தையும் வெளியுலகத்துக்கு காட்டினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Nayanthara sons birthday pics
இந்நிலையில், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் மகன்கள் உயிர் மற்றும் உலகத்தின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடி உள்ளனர். அங்குள்ள புகழ்பெற்ற டுவின் டவர் முன் மகன்களை தோழில் தூக்கி வைத்தபடி போட்டோ எடுத்து தன் மகன்களுக்கு ஸ்பெஷலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்கி.
uyir and ulag birthday special photoshoot
அதேபோல் மற்றொரு பதிவில் தன் மகன்களை மனதில் வைத்து எழுதிய ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலில் ‘என் முகம் கொண்ட என் உயிரே, என் குணம் கொண்ட என் உலகே’ என தன் மகன்களின் பெயர்களோடு கூடிய வரிகளை பதிவிட்டு எமோஷனலாக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் விக்கி. மகன்களின் முதல் பிறந்தநாளுக்காக விக்கி நயன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... லியோ ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் காரணமா? பின்னணியில் நடந்த மிகப்பெரிய சூழ்ச்சி என்ன?