கம்மி விலையில் தாய்லாந்தை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி தாய்லாந்திற்கு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்த கட்டணத்தில், தாய்லாந்தை சுற்றி பார்க்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
IRCTC Thailand Tour Package
நாட்டில் உள்ள பிரபலமான மற்றும் வரலாற்று இடங்களைப் பார்வையிட ஐஆர்சிடிசி பல அற்புதமான டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது. இது தவிர, ஐஆர்சிடிசி (IRCTC) பல சர்வதேச டூர் பேக்கேஜ்களையும் அறிமுகப்படுத்துகிறது.
Thailand Tour Package
நீங்கள் ஒரு சர்வதேச சுற்றுப்பயணத்தைத் திட்டமிடிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது ஆகும். ஐஆர்சிடிசி தாய்லாந்திற்குச் செல்ல ஒரு அற்புதமான டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜின் கீழ், தாய்லாந்தில் உள்ள பல அற்புதமான இடங்களைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
IRCTC Tour Packages
தாய்லாந்தின் பாங்காக் மற்றும் பட்டாயா நகரங்கள் மிகவும் பிரபலமானவை. இது தவிர, இங்குள்ள அழகிய கடற்கரைகள் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக இருக்கும். இந்த காரணத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் இந்த நாட்டிற்கு வருகை தருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Thailand Tour
ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜின் பெயர் ஸ்பார்க்லிங் தாய்லாந்து எக்ஸ் லக்னோ ஆகும். இந்த டூர் பேக்கேஜின் கீழ், 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் பயணம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
International tour packages
இந்த டூர் பேக்கேஜ் லக்னோவில் டிசம்பர் 8, 2023 அன்று தொடங்குகிறது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு அனைத்தும் பயணத்தின் போது ஏற்பாடு செய்யப்படும். கட்டணத்தைப் பற்றி பார்க்கும்போது, நீங்கள் தனியாக பயணம் செய்தால் ரூ.69,800 வாடகை செலுத்த வேண்டும்.
Thailand Tour Details
இருவருடன் பயணம் செய்தால் ஒரு நபருக்கு ரூ.60,300 கட்டணம். மூன்று பேருடன் பயணிக்க ஒரு நபருக்கான கட்டணம் ரூ.60,300 ஆகும். ஐஆர்சிடிசி டூர் குறித்து மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா