MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒரு படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம்.. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்.. தீபிகா, ஆலியா இல்ல..

ஒரு படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம்.. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்.. தீபிகா, ஆலியா இல்ல..

பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

2 Min read
Author : Ramya s
Published : May 09 2024, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இந்திய திரையுலகை பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகைகள் சில லட்சங்களில் சம்பளம் பெற்றனர். இதை தொடர்ந்து சில முன்னணி நடிகைகள் கோடிகளில் சம்பளம் பெற தொடங்கினர். ஆனால் தற்போது பல நடிகைகளும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அந்த வகையில் தீபிகா படுகோனே மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகைகள் தற்போது பாலிவுட்டில் கோலோச்சி வருகின்றனர். ஆனால் பாலிவுட் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன், ஆலியா பட் ஆகியோர் இல்லை.

38

ஆனால் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை பிரியங்கா சோப்ரா தான். ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பான சிட்டாடல் வெப் சீரிஸுக்கு ரூ. 40 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.. இந்தியாவில், அவர் ஒரு படத்திற்கு ரூ. 14-20 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

48

2010-களின் நடுப்பகுதி வரை, மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி மற்றும் தில் தடக்னே தோ போன்ற ஹிட் படங்களின் மூலம் நாட்டின் முன்னணி நடிகைகளில் பிரியங்கா சோப்ரா இருந்தார். ஆனால் அவர் ஹாலிவுட்டுக்கு சென்ற பிறகு, பிரியங்கா பாக்ஸ் ஆபிஸில் வெற்றி படங்களை கொடுத்தார்.

58

பிரியங்கா சோப்ராவின் முதல் பெரிய ஹாலிவுட் படமான பேவாட்ச் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து A Kid Like Jake, Isn’t It Romantic, We Can Be Heroes, The Matrix Resurrections, and Love Again ஆகிய படங்களில் தோன்றினார். இந்த படங்கள் அனைத்தும் வணிகரீதியாக தோல்வியடைந்தன.

68

இருப்பினும், பிரியங்கா தி ஸ்கை இஸ் பிங்க் (2016 முதல் அவரது ஒரே ஹிந்தி வெளியீடு) மற்றும் தி ஒயிட் டைகர் (நெட்ஃபிளிக்ஸ் வெளியீடு) போன்ற படங்களில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். கலவையான விமர்சனங்களை பெற்ற ஆனால் அதிக பார்வையாளர் எண்ணிக்கையைப் பெற்ற நிகழ்ச்சியான சிட்டாடல் தொடரில் அவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

 

78

பிரியங்காவைத் தவிர, தீபிகா படுகோனே அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகையாக இருக்கிறார். அவர்  ஒரு திட்டத்திற்கு ரூ. 15-30 கோடி சம்பளம் வாங்குகிறாராம்..

88
Priyanka Chopra

Priyanka Chopra

அவரைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் ஒரு படத்திற்கு ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆலியா பட், கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் என அனைவரும் 10 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது..

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
கங்கனா ரனாவத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved