டி20 உலகக் கோப்பையில் இந்த அணிகள் டிராபியை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது!
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் டிராபியை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
T20 World Cup
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இடம் பெற்ற 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றன. இதுவரையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற இந்தியா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
T20 World Cup
இதே போன்று, ஆஸ்திரேலியா விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று குரூப் பிரிவில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தென் ஆப்பிரிக்கா விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
T20 World Cup
இந்த நிலையில் தான் இந்த தொடரில் டிராபியை வெல்ல அதிக சதவிகித வாய்ப்புகளை கொண்ட அணிகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க. டி20 உலகக் கோப்பையில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணிகள் என்னென்ன?
T20 World Cup
டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா விளையாடி 45 போட்டிகளில் 28 வெற்றியும், 15 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதன் மூலமாக இந்தியாவிற்கு 64.77 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா விளையாடிய 42 போட்டிகளில் 27 வெற்றி, 15 வெற்றிகளுடன் 64.28 சதவிகிதத்துடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
T20 World Cup
இதே போன்று, தென் ஆப்பிரிக்கா 42 போட்டிகளில் விளையாடி 26 வெற்றி, 15 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 63.41 சதவிகித்துடன் 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 48 போட்டிகளில் விளையாடி 28 வெற்றி, 18 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 60.41 சதவிகிதத்துடன் 4ஆவது இடத்திலும், இலங்கை விளையாடிய 53 போட்டிகளில் 31 வெற்றி, 21 தோல்விகளுடன் 59.43 சதவிகிதத்துடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.
T20 World Cup
ஆனால், இந்த தொடரில் இதுவரையில் நடந்த போட்டிகளின்படி பாகிஸ்தான் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. எஞ்சிய 2 போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட நெட் ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.
T20 World Cup
ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.