கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருமானம்.. இந்தியாவின் டாப் 5 மியூச்சுவல் ஃபண்டுகள் இதுதான்..
கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருவாய் வழங்கிய 5 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் நீங்கள் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெறலாம்.
Mutual Funds
பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்பாத பலரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், அதில் முதலீடு செய்யப்படும் தொகை மட்டும் இல்லாமல், நபர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
Stock Market Index
இதனால் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களில் பலருக்கும் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும், எதனை தேர்வு செய்ய கூடாது போன்ற பல கேள்விகள் எழுவது சகஜமான ஒன்றாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Large Cap Mutual Funds
இந்த நிலையில் முக்கிய புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருவாய் வழங்கிய 5 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி விரிவாக பார்க்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருவாயை வழங்கிய ஐந்து லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் ஆகும்.
Large Cap Stocks
இது 17.09% வருமானத்தை அளித்தது, அதைத் தொடர்ந்து மிரே அசெட் லார்ஜ் கேப் ஃபண்ட் 16.99% வருவாயுடன் உள்ளது. மற்ற மூன்று ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட், எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி டாப் 100 ஃபண்ட் ஆகும்.