Lemon : லெமன் சாப்பிட்டால் இவ்வளவு சைடு எஃபெக்ட் இருக்கா..? தெரிஞ்சுட்டு சாப்பிடுங்கப்பா..!
யாருக்கெல்லாம் எலுமிச்சை ஒத்துக் கொள்ளாது என்றும், அதற்கான காரணம் என்ன என்றும் இந்த பதிவு பார்க்கலாம்.
எலுமிச்சை சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். இதில், எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனாலும், இது எல்லோருக்கும் ஏற்றதல்ல.
ஆம், சிலர் எலுமிச்சை எடுத்துக் கொள்ளும் போது அவர்களுக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால், சிலருக்கோ மோசமான தீங்கு விளைவிக்கும். எனவே, அப்படிப்பட்டவர்கள் அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. யாருக்கெல்லாம் எலுமிச்சை ஒத்துக் கொள்ளாது என்றும், அதற்கான காரணம் என்ன என்றும் இந்த பதிவு பார்க்கலாம்.
வயிற்றுப்புண்: எலுமிச்சை அமிலத்தன்மத்தை உடையது என்பதால், சிலருக்கு இந்த அமல தன்மையால் நெஞ்செரிச்சல் வயிற்றுப் புண் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். வயிற்றுப்புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சையை எடுத்துக் கொண்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, அவர்கள் அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பல் பிரச்சனை: உங்களுக்கு பல் பிரச்சனை இருந்தால் எலுமிச்சையை எடுத்துக் கொள்ளும் போது, அதில் இருக்கும் அமிலத்தன்மை பல்லின் பற்சிப்பியை காலப்போக்கில் அரித்துவிடும். மேலும் பற்களின் உணர்வு மற்றும் துவாரங்களை அதிகரிக்கும். எனவே, இது மாதிரியான ஆபத்துகளை தவிர்க்க எலுமிச்சை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா? தினமும் வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்..
lemon
சிட்ரஸ் ஒவ்வாமை: சிலருக்கு எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பலத்தால் ஒவ்வாமை ஏற்படும். இந்த ஒவ்வாமை வெகு சிலருக்கு தான் ஏற்படும் என்று சொல்லலாம். அரிப்பு, படை நோய், உதடு, நாக்கு (அ) தொண்டை வீக்கம் போன்றவையே இதன் அறிகுறியாகும். எனவே, இது மாதிரியான அறிகுறிகளை நீங்கள் கண்டால் சிட்ரஸ் பழங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க!!
சிறுநீரகப் பிரச்சனை: எலுமிச்சையில் ஆக்சலேட்டுகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இவர்கள் எலுமிச்சை போன்ற பிற அதிக ஆக்சலேட்டுகள் உணவுகளை எடுத்துக் கொள்வது குறைப்பது நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D