இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க!!
எலுமிச்சை பழத்தில் இயற்கையாகவே அமிலத்தன்மை உள்ளது. எனவே, எலுமிச்சை தோலை உங்கள் வீடு, பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். அது எப்படி தெரியுமா?

லெமன் ஜூஸ் லெமன் டீ என போன்றவற்றிற்கு எலுமிச்சை பழத்தை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் பெரும்பாலும் நாம் எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதன் தோலை குப்பையில் போடுகிறோம்.
ஆனால் எலுமிச்சை தோல் பல வழிகளில் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், எலுமிச்சை பழம் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது. எனவே, எலுமிச்சை தோலை உங்கள் வீடு, பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோல் இரண்டும் இயற்கையான சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. இது கிருமிகளை அற்புதமாக நீக்குகிறது. இதன் அமிலத்தன்மை கிரீஸ் மற்றும் விடாப்பிடியான அழுக்கு மற்றும் கறையை நீக்குகிறது.
எலுமிச்சை தோலை நாம் நேரடியாக பாத்திரங்களை கழுவ பயன்படுத்தலாம். சோப்பு மற்றும் பேக்கிங் சோடா போன்ற செயற்கை பொருட்களை விட இயற்கையான இப்பழம் சிறந்தது. சிறந்த முடிவுகளுக்கு இதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
கட்டிங் போர்டு: காய்கறிகளை வெட்டுவதற்கு நாம் பயன்படுத்தும் கட்டிங் போர்டுகளை சுத்தம் செய்ய எலுமிச்சை தோலை பயன்படுத்தலாம். ஏனெனில், இது ஒரு இயற்கை கிருமி நாசினியாக செயல்படுகிறது.
இதையும் படிங்க: Lemon Peel: இது தெரிந்தால் எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டிங்க: அவ்ளோ பலன்கள் இருக்கு!
தொட்டியை சுத்தமாக்க: நம் வீட்டில் இருக்கும் பாத்திரம் கழுவும் தொட்டி, முகம் கழுவும் தொட்டி போன்றவற்றை எலுமிச்சை தோலை வைத்து சுத்தம் செய்யலாம். இதனால் அவை புதியது போல் பிரகாசிக்கும்.
இதையும் படிங்க: இந்த அற்புத சக்தி பற்றி தெரிந்தால் போதும்..இனி எலுமிச்சம் பழத்தோலை தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..
மைக்ரோவேவ் ஓவன்: உங்கள் மைக்ரோவேவ் ஓவனில் கெட்ட வாடை அல்லது அழுக்கு இருந்தால், நீங்கள் சுத்தம் சிரமம்படுகிறீர்கள் என்றால்,
எலுமிச்சை தோல்களை ஒரு கிண்ணத்தில் போட்டு நீங்கள் அதை ஓவனில் சூடாக்கினால், அவை ஆவியாகி ஓவன் முழுவதும் பரவிவிடும். அதன் பிறகு அதை சுத்தம் செய்யலாம்.
செப்புப் பாத்திரம்: பெரும்பாலான வீடுகளில் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது வழக்கம். அதுமட்டுமின்றி, சிலர் அதில் உணவு சாப்பிடுவார்கள். எனவே, இந்த பாத்திரங்களை நீங்கள் எலுமிச்சை தோலைக் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
டீ மற்றும் காபி பாத்திரங்கள்: பொதுவாகவே, டீ, காபி பாத்திரங்கள் கறை படிந்து அழுக்காக இருக்கும். அவற்றை நீக்க எலுமிச்சைத் தோலைக் கொண்டு கறை படிந்த பாத்திரங்களை சுத்தம் செய்தால் கறை நீங்கி அவை பளபளப்பாக இருக்கும்.