MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இப்ப தான் நடிக்க வந்தாங்க அதுக்குள்ள திருமணமா? சிம்பிளாக நடந்து முடிந்த குட் நைட் பட நடிகையின் நிச்சயதார்த்தம்

இப்ப தான் நடிக்க வந்தாங்க அதுக்குள்ள திருமணமா? சிம்பிளாக நடந்து முடிந்த குட் நைட் பட நடிகையின் நிச்சயதார்த்தம்

முதல் நீ முடிவும் நீ, குட் நைட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை மீதா ரகுநாத்தின் திருமண நிச்சயதார்த்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

2 Min read
Ganesh A
Published : Nov 24 2023, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
meetha raghunath

meetha raghunath

தர்புகா சிவா இயக்கத்தில் கடந்தாண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீசான திரைப்படம் முதல் நீ முடிவும் நீ. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம், பலரது பள்ளி பருவ நினைவுகளை தூண்டும் விதமாக அமைந்திருந்தது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மீதா ரகுநாத். இதில் அவருக்கும் கிஷன் தாஸுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேறவெலவில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

24
mudhal nee mudivum nee, good night movie posters

mudhal nee mudivum nee, good night movie posters

முதல் நீ முடிவும் நீ படத்தின் வெற்றிக்கு இவர்களின் கெமிஸ்ட்ரி ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இப்படத்தில் ஸ்கூல் பெண், குடும்ப பெண் என இரண்டு பரிணாமங்களுக்கு சூப்பராக பொருந்தி இருந்தார் மீதா. முதல் படத்திலேயே தன் நடிப்பால் பலரையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்டுக்களையும் பெற்றார் மீதா. முதல் நீ முடிவும் நீ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீதா அடுத்ததாக நடித்த திரைப்படம் குட் நைட்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
meetha engagement

meetha engagement

இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்த படங்களில் குட் நைட்டும் ஒன்று. இப்படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீதா. கணவனுக்காக எதையும் சகித்துக் கொள்ளும் ஒரு அப்பாவி பெண்ணாக இப்படத்தில் மீதாவின் நடிப்பு வேறலெவலில் இருந்தது. முதல் நீ முடிவும் நீ படத்தைப் போல் குட் நைட்டும் வேறலெவலில் ஹிட் ஆனதால், ராசியான ஹீரோயினாக மாறினார் மீதா ரகுநாத்.

44
meetha raghunath engagement clicks

meetha raghunath engagement clicks

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் மீதா ரகுநாத். அவரது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இப்ப தான் நடிக்க வந்தாங்க, அதுக்குள்ள திருமணமா என ஷாக் ஆகி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... கோவையில் இலவச இணையதள வசதியுடன் நூலகம் திறந்த விஜய் மக்கள் இயக்கத்தினர்... குவியும் பாராட்டு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved