அடுத்தடுத்து 2 வைல்டு கார்டு எண்ட்ரி... சூடுபிடிக்கப்போகும் பிக்பாஸ் - அந்த 2 பேர் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பிரபல கானா பாடகர் மற்றும் பிரபல சீரியல் நடிகை ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக கலந்துகொள்ள உள்ளார்களாம்.
Bigg Boss Tamil season 7
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வார இறுதியில் அனன்யா மற்றும் பவா செல்லதுரை வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதில் இந்த வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆக உள்ளதால், மீதம் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருப்பர்.
Bigg Boss Contestants
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எதிர்பாராத்தை எதிர்பாருங்கள் என்பது தான் கான்செப்ட். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் பாதியில் எண்ட்ரி கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த முறையும் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் அடுத்தடுத்து எண்ட்ரி கொடுக்க உள்ளார்களாம். அநேகமாக அடுத்த வாரம் இவர்களது வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Archana
அதன்படி ஏற்கனவே நாம் வெளியிட்ட தகவலின் படி, சீரியல் நடிகை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க உள்ளது உறுதியாகி உள்ளது. தற்போது புது வரவாக இணைந்து மற்றொரு வைல்டு கார்டு போட்டியாளர் யாரென்றால் அது புகழ்பெற்ற கானா பாடகரான கானா பாலா தான். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இவர் பாடல்கள் இல்லாத படமே கிடையாது என சொல்லும் அளவுக்கு செம்ம பிசியாக வலம் வந்தார்.
Gana Bala
ஆனால் ஒருகட்டத்தில் கானா பாடல்களுக்கான மவுசு கோலிவுட்டில் குறைந்ததால், அவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்டு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர காத்திருக்கிறார் கானா பாலா. இவர்கள் இருவரின் எண்ட்ரிக்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் என்னென்ன கலாட்டாக்கள் நடக்கப்போகிறதோ என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய் திரிஷா லிப்கிஸ் முதல் ரஜினியின் ரெட்ரோ பாடல் வரை... லியோவில் லோகேஷ் வைத்த சர்ப்ரைஸுகள் ஒரு பார்வை