MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • CWC 5 : குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நாஞ்சில் விஜயன்... அவரது இடத்தை Replace செய்யப்போவது இந்த நடிகையா?

CWC 5 : குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நாஞ்சில் விஜயன்... அவரது இடத்தை Replace செய்யப்போவது இந்த நடிகையா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இருந்து நாஞ்சில் விஜயன் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை களமிறக்கி உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : May 05 2024, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
cook with comali 5

cook with comali 5

சமையல் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் ஆரம்பமானது. கடந்த நான்கு சீசன்களைப் போல் அல்லாமல் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களுடன் இந்த சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

24
cook with comali season 5

cook with comali season 5

அந்த வகையில் கடந்த நான்கு சீசன்களாக நடுவராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இந்நிகழ்ச்சியில் புது நடுவராக களமிறங்கி உள்ளார். இதுதவிர இந்நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனம், இந்நிகழ்ச்சியை இயக்கி வந்த பார்த்திவ் மணி ஆகியோரும் அண்மையில் விலகியதால், அவர்களுக்கு பதில் புது டீம் உடன் குக் வித் கோமாளி சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Ghibran : இஸ்லாமில் இருந்து ஹிந்துவா மாறிட்டேன்... மதம் மாறிய கையோடு பெயரை மாற்றிய இசையமைப்பாளர் ஜிப்ரான்

34
Nanjil Vijayan

Nanjil Vijayan

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் விடிவி கணேஷ், ஷாலின் சோயா, திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா, பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து சமைக்க புகழ், சுனிதா, சரத், குரேஷி, போன்ற சீனியர் கோமாளிகள் இருந்தாலும், ராமர், நாஞ்சில் விஜயன், வினோத், சப்னம், அன்ஷிதா, கேமி போன்ற புது கோமாளிகளையும் களமிறக்கி இருந்தனர்.

44
Farina Azad

Farina Azad

அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் மட்டும் கோமாளியாக கலந்துகொண்ட நாஞ்சில் விஜயன், தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை எனக்கூறிய அவர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாஞ்சில் விஜயனுக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புது கோமாளியாக நடிகை ஃபரீனா அசாத் களமிறங்கி உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ஓடிடியில் ரிலீஸானது - அதுவும் இந்த OTT தளத்திலா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved