RS Shivaji Passed Away: அதிர்ச்சியில் திரையுலகம்..! பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!
பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, இன்று காலை திடீர் என உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Rs Shivaji
பிரபல தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி. தன்னுடைய 66 வயதில் இன்று காலை 7 மணியளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
Rs Shivaji
ஆர். எஸ்.சிவாஜி கடந்த 1981 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரர் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படத்தின் மூலம், குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அந்த வகையில்... மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Rs Shivaji
கடைசியாக இவர் யோகி பாபுவுடன் நடித்திருந்த 'லக்கி மேன்' திரைப்படம் நேற்று வெளியானது. வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் குலவிளக்கு, எத்தனை கோணம் எத்தனை பார்வை, அன்புள்ள சிநேகிதியே, மருதாணி, வல்லமை தாராயோ, போன்ற பல சீரியல்களில் ஆர்.எஸ்.சிவாஜி நடித்துள்ளார். அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியான 'டைம் என்ன பாஸ்' என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.
Rs Shivaji
நடிகராக மட்டும் இன்றி, துணை இயக்குனர், சவுண்ட் டிசைனர், லைன் ப்ரொடியூசர், என பன்முக திறமையோடு விளங்கியவர் ஆர்.எஸ்.சிவாஜி. (1.9. 2023) நேற்று மாலை சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் நடிகர் ராஜேஷ், நடிகை ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ராசி அழகப்பன் உள்ளிட்டோருடன் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜியும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த இவர் திடீர் என இன்று உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவலை அவருடைய சகோதரர் சந்தான பாரதி உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.