MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வேறு வழியே இல்லை.. உச்சநீதிமன்றம் கதவை தட்டிய திமுக அமைச்சர்கள்.. இடையில் புகுந்த அதிமுக, பாஜக.!

வேறு வழியே இல்லை.. உச்சநீதிமன்றம் கதவை தட்டிய திமுக அமைச்சர்கள்.. இடையில் புகுந்த அதிமுக, பாஜக.!

தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 24 2024, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Thangam Thennarasu

Thangam Thennarasu

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. 
 

25
Justice Anand venkatesh

Justice Anand venkatesh

இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இதுதொடர்பாக நீதிபதி மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்தார். மறு ஆய்வு வழக்குகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விலக வேண்டும் எனவும், வேறு நீதிபதி விசாரிக்கவும் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையும் படிங்க;- கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

 

35
Chennai High Court

Chennai High Court

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு மறு ஆய்வு வழக்குகளின்  விசாரணை பிப்ரவரி 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை தினசரி அடிப்படையில் நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கில் பிப்ரவரி 12ம் மற்றும் 13ம் தேதிகளிலும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை பதில் மனு அல்லது எழுத்துப்பூர்வ வாதமாக ஜனவரி 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருந்தார்.

45
Supreme court

Supreme court

இந்நிலையில், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில், உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர். 

இதையும் படிங்க;- திமுக இளைஞரணி மாநாடு நமுத்துப்போன மிக்சர் - அண்ணாமலை விமர்சனம்

55
AIADMK BJP

AIADMK BJP

தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு பாஜக மற்றும் அதிமுகவின் ஜெயக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவருடைய வழக்குகளிலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அதில் தெரிவித்துள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved