எனது கணவர் சொந்த ஊரு திருவண்ணாமலை! அதனால அமைச்சர் EV.வேலுவை நன்றாக தெரியும்! அசராத மீனா ஜெயக்குமார்.!
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரி சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும், பணமும், ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை என மீனா ஜெயக்குமார் கூறியுள்ளார்.
meena jayakumar
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் முக்கிய பிரமுகராக கருதப்படும் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம், அவரது உறவினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் மற்றும் கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் திமுக தமிழ் இலக்கிய பகுத்தறிவு பாசறை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீ ராம் வீடு, அலுவலகத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நேற்று மாலை நிறைவு அடைந்தது.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீனா ஜெயக்குமார்;- இந்த சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும், பணமும், ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை. தனக்கும் அமைச்சர் எ.வ வேலுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது கணவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலை தான். எனது கணவரின் அப்பாவை அவருக்கு நன்றாகத் தெரியும். ஒருமுறை அவர் கோவை வந்தபோது பொங்கலூர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது முதல் அங்கிளுக்கு நன்றாகத் தெரியும். அப்போது சென்னை சென்றாலும் எனது கணவர் அமைச்சரை பார்ப்பார். அவர் இங்கே வந்தாலும் பார்ப்பார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- யார் இந்த மீனா ஜெயக்குமார்? அவருக்கும் அமைச்சர் எ.வ. வேலுவுக்கும் என்ன தொடர்பு?
எதற்காக தனது இல்லத்தில் சோதனை நடந்தது என புதிராக உள்ளது என்றார். எங்கள் வீட்டில் எங்களையோ, பணியாளர்களையோ வருமானவரித்துறை அதிகாரிகள் துன்புறுத்தவில்லை. எங்களிடம் அமைச்சர் தொடர்பான ஆவணங்களைக் கேட்டார்கள். அது எதுவும் எங்களிடம் இல்லை என தெரிவித்தோம். மேலும் எங்களின் எல்லா வங்கி கணக்கு விவரங்களையும் எடுத்துக் கொடுத்தோம். அவற்றை ஆய்வு செய்தனர் என மீனா ஜெயக்குமார் தெரிவித்தார்.