MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இயக்குனர் பாலாவால் ஏமாற்றப்பட்ட மறைந்த இயக்குனர் வி.ஏ.துரை.! கடைசி வரை போராடியும் கிடைக்காத பணம்!

இயக்குனர் பாலாவால் ஏமாற்றப்பட்ட மறைந்த இயக்குனர் வி.ஏ.துரை.! கடைசி வரை போராடியும் கிடைக்காத பணம்!

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தயாரித்து, பிரபலமான தயாரிப்பாளர் வி.ஏ.துரை நேற்று இரவு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரிடம் பணம் வாங்கிக்கொண்டு இயக்குனர் பாலா ஏமாற்றிய தகவல் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 03 2023, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
VA Durai Death:

VA Durai Death:

கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை நேற்றிரவு காலமானார். இவரின் வயது 69. இவர் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'என்னம்மா கண்ணு' என்கிற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர். இது மட்டுமின்றி தேசிய விருது பெற்ற பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, ரஜினிகாந்த் நடித்த பாபா, போன்ற பிக் பட்ஜெட் படங்களையும் தயாரித்துள்ளார்.  அதே போல் லூட்டி, லல்வி, விவரமானவன், ஸ்மால் பட்ஜெட் வெற்றிப்படங்களையும் தயாரித்துள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Rajinikanth Baba movie Producer

Rajinikanth Baba movie Producer

இவர் தயாரித்த, சிறு பட்ஜெட் படங்கள் கூட இவருக்கு லாபத்தை பெற்று கொடுத்த நிலையில், விஜயகாந்த் நடித்த 'கஜேந்திரா' மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாபா' போன்ற படங்கள் படு மோசமான தோல்வியை தழுவியதால், மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார். படத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்து... நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.

53 வயதிலும்.. 23 வயசு ஹீரோயின் போல் இருக்கும் குஷ்பு! நயன்தாராவை மிஞ்சும் ரொமான்ஸில் பர்த்டே கொண்டாடிய போட்டோ
 

37
VA Durai Sick

VA Durai Sick

மேலும் இதன்காரணமாக ஏற்பட்ட பிரச்சனையால், இவரின் மனைவி மற்றும் மகளும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாகவே இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இதை தொடர்ந்து தனியாக வசித்து வந்த வி.ஏ.துரை ஒருகட்டத்தில், கையில் மிச்சம் மீதி இருந்த காசும் கரைந்து விட்டதால், தன்னுடைய மருத்துவ உதவிக்கும், தங்கும் இடத்திற்கும் கூட நண்பர்களை எதிர்பார்க்கும் நிலை வந்தது.

47
Suriya, Rajinikanth, Vikram Medical Help

Suriya, Rajinikanth, Vikram Medical Help

பின்னர் வி.ஏ.துரையின் நண்பர் ஒருவர் கடந்த மார்ச் மாதம், இவரின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு வெளியிட்ட வீடியோ திரையுலகில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதை தொடர்ந்து சுமார் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, நடிகர் விக்ரம், போன்ற பலர் இவருக்கு பணம் கொடுத்து உதவினர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வி.ஏ.துரையின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டார். அதே போல் நடிகர் விக்ரம், வி.ஏ.துரையின் ஒரு கால் அகற்றப்பட்ட நிலையில், செயற்கை கால் பொருத்துவதற்கான செலவை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Ayalaan Teaser: ஒருவழியா அயலானுக்கு விடிவு காலம் பொறந்துடுச்சு..! சிவகார்த்திகேயன் வெளியிட்ட சூப்பர் தகவல்..!
 

57

ஆனால், வி.ஏ.துரையிடம் 25 லட்சம் பெற்றுக்கொண்டு... ஏமாற்றிய பாலா உதவவும் முன்வரவில்லை. அவரிடம் பெற்ற பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. அதாவது "பாலா இயக்கத்தில் துரை தயாரிப்பில் வெளியான 'பிதாமகன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் பாலாவை ஒரு படம் இயக்கி தர கூறினார் துரை. இதற்கு முன் பணமாக 25 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் பாலா படத்தை சொன்னபடி எடுத்து கொடுக்காமல், இழுத்துக் கொண்டே சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் நீங்கள் படமே இயக்க வேண்டாம்... என்னிடம் வாங்கிய 25 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என தன்னுடைய கஷ்ட காலத்தின் போது தயாரிப்பாளர் வி ஏ துரை கேட்டுள்ளார்.
 

67
Bala Cheating VA Durai

Bala Cheating VA Durai

ஆனால் பாலா வாங்கிய பணத்தை வி.ஏ.துரையிடம் கொடுக்க முன்வரவில்லை. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தது மட்டுமின்றி, பாலாவின் அலுவலகத்திற்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தர்ணாவை கைவிட சொல்லி இதற்க்கு தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்கள். எனவே தன்னுடைய போராட்டத்தையும் அமைதியாக கைவிட்டார்.

புடவைகளுக்காக ஒரு வீடே வைத்திருக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா மகாலட்சுமி.! எத்தனை புடவை வச்சிருக்காங்க தெரியுமா?
 

77
Bala Don't Consider VA Durai

Bala Don't Consider VA Durai

கடைசி வரை பணத்தை பாலா கொடுக்கவில்லை. பலரிடம் கையேந்தி நிற்கும் நிலைமையிலும்... சில பெரிய ஆட்கள் மூலம், தனக்கு சேர வேண்டிய பணத்தை... துரை பாலாவிடம் கேட்டும் அவர் கொஞ்சம் கூட மனம் இறங்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான். 25 லட்சம் கொடுக்கவில்லை என்றாலும் தன்னால் முடிந்த உதவியை பாலா வி.ஏ.துரைக்கு செய்திருந்தால்... அவரின் மனிதாபிமானம் வெளிப்பட்டிருக்கும் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
நடிகர் விக்ரம்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved