சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. பூமிக்கு வரும் வேற்றுகிரக வாசிக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையே உருவாகும் நட்பு குறித்தும், பின்னர் அந்த வேற்றுகிரக வாசிக்கு வரும் பிரச்சனையில் இருந்து அதை சிவகார்த்திகேயன் எப்படி மீட்கிறார் என்பதை விறுவிறுப்பான சயின்ஸ் ஃபிக்சன் அதையம்சத்துடன் இந்த படத்தை இயக்கியுள்ளார் ரவிக்குமார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும், VFX மற்றும் கிராபிக் பணிகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தாமதமாகி வந்தது, இடையில், கொரோனா பிரச்சனை தலைதூக்கியதால் மேலும் தாமதமானது. ஏற்கனவே பலமுறை இபபடத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாததால், படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே சென்றது.

இந்நிலையில் தற்போது இந்த படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் ரிலீஸ் வெளியாகி உள்ளதால்... இனியும் அயலான் படத்தின் ரிலீஸில் எந்த மாற்றமுமின்றி கண்டிப்பாக ரிலீசாகும் என தெரிகிறது. விரைவில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளிலும் படக்குழு ஈடுபடும் என தெரிகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோருடன் இருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அக்டோபர் 6 ஆம் இப்படத்தின் டீசர் வெளியாகும் என தெரிகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரித்திசிங், நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
