MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vaseline இத்தனை வழிகளில் பயன்படுத்தலாமா? இது செய்யும் மாயாஜாலம் இதோ..!!

Vaseline இத்தனை வழிகளில் பயன்படுத்தலாமா? இது செய்யும் மாயாஜாலம் இதோ..!!

பெட்ரோலியம் ஜெல்லி என்றும் அழைக்கப்படும் வாஸ்லின், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. வாஸ்லைன் பல பொருட்களை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சிகலாம்..

2 Min read
Kalai Selvi
Published : Dec 05 2023, 09:37 AM IST| Updated : Dec 05 2023, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாது. அவற்றில் ஒன்று தான் வாஸ்லின். இப்போது கிட்டத்தட்ட அனைவரும் இதனை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதை எத்தனை வழிகளில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்…

29

வாஸ்லைனை மாய்ஸ்சரைசிங் க்ரீமாக அனைவரும் பயன்படுத்துகின்றனர். குளிர்காலத்தில் இதன் பயன்பாடு அதிகம். மிகவும் குளிராக இருக்கும் போது,   மக்கள் அதை தங்கள் பையில், தங்களோடு வைத்துக் கொள்வார்கள். வாஸ்லைன் மாசுபட்ட சூழல், சூரியன், காற்று ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. சிலர் மேக்கப் ரிமூவராகவும் வாஸ்லைனை பயன்படுத்துகின்றனர். 

39

பெட்ரோலியம் ஜெல்லி என்றும் அழைக்கப்படும் வாஸ்லின், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. சுத்தம் செய்வதற்கும் வாஸ்லைன் பயன்படுத்தப்படுகிறது. வாஸ்லைனை இப்படிப் பயன்படுத்தலாம் என்பது பலருக்குத் தெரியாது. வாஸ்லின் இன்னும் எத்தனை பயன்கள் என்று இங்கு பார்க்கலாம்.

49

ஷூக்கள்: ஷூக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றைச் சுத்தம் செய்ய பல்வேறு வகையான ஷூ கிளீனர்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஷூக்களை சுத்தம் செய்வதற்கும், பளபளப்பதற்கும் வாஸ்லைன் சிறந்தது. இதற்கு, உங்கள் ஷூக்களில் வாஸ்லைனை தடவி, ஒரு துணியால் தேய்த்தால், சில நிமிடங்களில் உங்கள் அது புதியது போல் பிரகாசிக்கும்.

இதையும் படிங்க:  Vaseline: வாஸ்லின் இருந்தால் இவ்வளவு விஷயங்களை செய்யலாமா? நம்ப முடியாத பலன்கள்!!

59

கதவு மற்றும் ஜன்னல்: சில நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் மற்றும் அலமாரிகளில் இருந்து சத்தம் வரும். அச்சமயத்தில், ஜன்னல், கதவு மற்றும் ஷெல்ஃப் திருகுகளில் வாஸ்லைனைத் தடவி இரண்டு நாட்களுக்கு அப்படியே வைக்கவும். இப்படி செய்வதால், அவற்றில் இருந்து சத்தம் வருவது  குறையும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

69

ஆடைகளில் உள்ள லிப்ஸ்டிக் கறைகளை நீக்க: துணிகளில் உள்ள லிப்ஸ்டிக் கறைகளை வாஸ்லின் மூலம் எளிதாக நீக்கலாம். கறை படிந்த இடத்தில் வாஸ்லினை தடவி கழுவினால் லிப்ஸ்டிக் கறை எளிதில் நீங்கும்.

79

பர்னிச்சர் கறைகளை நீக்க: வீட்டில் விலை உயர்ந்த மரச்சாமான்கள் சில நாட்களுக்குப் பிறகு அழுக்காக மாறிவிடும். அவற்றை நீக்க வாஸ்லின் உங்களுக்கு உதவும். இதற்கு, கறைகள் படிந்த பகுதிக்கு வாஸ்லைனைப் பயன்படுத்துங்கள். இரவு முழுவதும் வைக்கவும். காலையில் சுத்தமான துணியால் தேய்த்தால் கறை நீங்கும்.

89

இதற்கும் வாஸ்லைனையும் பயன்படுத்தலாம்: நகத்தில் போட்டிருக்கும் நெயில் பாலிஷ் அகற்றுவது மிகவும் கடினமாக இருந்தால், அந்த இடத்தில் வாஸ்லைனைப் பயன்படுத்துங்கள். சிறிது நேரம் கழித்து எளிதாக அகற்றலாம். 

99

அதுபோல், வாஸ்லின் நமது சருமத்தை வாசனை திரவியங்களிலிருந்து பாதுகாக்கிறது. வாசனை திரவியம் பூசப்பட வேண்டிய இடத்தில் முதலில் வாஸ்லைனைத் தடவி, பிறகு வாசனைத் திரவியத்தைப் பூசுவதால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved