MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சைலண்டாக மகனை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்த தனுஷ்... கோலிவுட்டில் அறிமுகமாகும் யாத்ரா..!

சைலண்டாக மகனை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்த தனுஷ்... கோலிவுட்டில் அறிமுகமாகும் யாத்ரா..!

நடிகர் தனுஷ் தன்னுடைய மூத்த மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை வைத்து சைலண்டாக ஒரு படத்தையே எடுத்து முடித்து விட்டாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2024, 01:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
dhanush son yatra

dhanush son yatra

நடிகர் தனுஷ் தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என செம்ம பிசியாக வேலை செய்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது டி51 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர இவர் நடிப்பில் இளையராஜா பயோபிக் படமொன்றும் உருவாக உள்ளது. அதை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

24
Dhanush with Yatra and Linga

Dhanush with Yatra and Linga

மேலும் ராஞ்சனா படத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு இந்தி படம், எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. இதுதவிர தனுஷ் இரண்டு படங்களை இயக்கியும் வருகிறார். அதில் ஒரு படத்துக்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை UnFollow செய்த நயன்தாரா... இன்ஸ்டாவில் புயலைக் கிளப்பிய லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் பதிவு

34
Aishwarya Rajinikanth with her sons

Aishwarya Rajinikanth with her sons

அதேபோல் அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் ராயன். வடசென்னையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் தனுஷ் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், சந்தீப் கிஷான், பிக்பாஸ் சரவணன், பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

44
dhanush son yatra debut in Raayan Movie

dhanush son yatra debut in Raayan Movie

இந்நிலையில், ராயன் படம் குறித்த மற்றுமொரு ஹாட் அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ராவும் சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம். யாத்ராவுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அவரை ராயன் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறாராம் தனுஷ். இதுவரை அப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பதை அறிவிக்காமல் சீக்ரெட்டாக வைத்திருப்பதற்கு காரணமும் அதுதானாம். தனுஷ் தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தையே சைலண்டாக எடுத்து முடித்துள்ளது தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் கவுதம் மேனன் படத்துக்கே தண்ணிகாட்டிய மஞ்சுமெல் பாய்ஸ்... நேற்று ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved