கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் திடீரென வெடித்த குழாய்.. ஊரை சூழ்ந்த புகை.. தொழிலாளர்களின் கதி என்ன?
கடலூர் சிப்காட் தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
கடலூர் சிப்காட் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நேற்று பாய்லர் பராமரிப்பு பணி நடைபெற்று இரவு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து ரசாயன புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்து காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனாலும் துர்நாற்றம் வீசும் நிலையில் கண் எரிச்சல் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதாக சொல்லி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!