Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாவரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பல்லாவரம்:
மல்லிகா நகர், ஹரியான் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பட்டாபிராம்:
மிட்டனமல்லி காந்தி சாலை, சபி நகர், பெரியார் நகர், எல்லையம்மன் நகர், பாரதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வியாசர்பாடி:
இ.எச். சாலை, பி.வி.காலனி, இந்திரா நகர், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், A,B,C கல்யாணபுரம், உதய சூரியன் நகர், சர்மா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.