திருமணமான 4 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை.. இதுதான் காரணமா? 3 பக்கம் கடிதம் சிக்கியது..!
சென்னையில் திருமணமான 4 மாதத்தில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சரவணன் (30). இவர் ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவரின் மனைவி காயத்ரி (25 ). இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் பெருங்களத்தூர் புத்தர் தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சரவணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?
இந்நிலையில் நேற்று பணிக்கு சென்ற சரவணன் அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது படுக்கை அறையில் மனைவி காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் சரவணனும் அதே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காயத்ரி அறையில் இருந்து 3 பக்கம் கொண்ட தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.