நிலத்திற்கு வந்த நீல வானமே.. படக்குனு ரசிகர்களை கவிதை பாட வைத்த ரம்யா பாண்டியன் - அழகிய கிளிக்ஸ் இதோ!
Actress Ramya Pandian Photos : பிரபல நடிகர் அருண் பாண்டியன் அவர்களின் உறவினர் தான் பிரபல நடிகர் ரம்யா பாண்டியன். ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உலக பேமஸ் ஆனா நடிகை அவர் என்றால் அது மிகையல்ல.
Ramya Pandian
தமிழ் திரையுலகில் கடந்த 2016ம் ஆண்டு பிரபல இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை தான் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஓரிரு படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
Actress Ramya Pandian
மலையாள மொழியில் தற்போது வெளியாகியுள்ள ஒரு படத்தில் நடித்திருந்த ரம்யா பாண்டியன், அடுத்தபடியக தமிழிலும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அவ்வப்போது எடுக்கின்ற கூலான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் அவர்.
Actress Ramya Pandian Pics
திரைப்படம், சின்னத் திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ரம்யா பாண்டியன் வெப் தொடர்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தற்போது நீல நிற உடை அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகின்றது.