ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Jigarthanda
கார்திக் சுப்புராஜ் இயக்கத்தில், லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அதன்படி இந்த படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
jigarthanda Double X
கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் ப்ரீகுவலாக (முன்பகுதியாக) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவாகி உள்ளது. மேலும் எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸின் புதுமையான காம்போவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனால் இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மூலம் அவர் கம்பேக் கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Jigarthanda
இதனிடையே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய எஸ்.ஜே சூர்யா “ கார்த்திக் சுப்புராஜின் அரிய படைப்பாக குறிஞ்சி மலர் போன்ற் இந்த ப்டத்தை மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
திரிஷா குறித்து கொச்சை பேச்சு... மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை
Jigarthanda DoubleX
இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இந்த படத்திற்கு ரூ.7 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு திருநாவுக்கரவு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.