Power Shutdown in Chennai: அப்பாடா.. இன்னைக்கு இந்த பகுதிகளில் மட்டும் தான் 5 மணிநேரம் மின்தடையாம்.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செம்பியம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
செம்பியம்:
வெற்றிவேல் தெரு, டீச்சர்ஸ் காலனி 1 முதல் 9வது தெரு, பெரியார் நகர் எம்.எச். சாலை அன்னை சத்யா நகர், சாஸ்திரி நகர் 1 முதல் 5வது தெரு, ரிஸ்வான் சாலை பகுதி, அருள் நகர் மெயின் ரோடு, வி.காலனி 1 முதல் 10வது தெரு, பின்னி நகர் மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.