Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Chennai Power Cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01h13v0zm1wdg6yjc3ja2n8tpc/bengaluru-power-cut--1-_300x171xt.jpg)
Electrical Maintenance Work
அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
பொன்னேரி
டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும். இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மாலை 5 மணிக்கு மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.