எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. தாயின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை மகன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேலகனக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (45). வேன் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரகடம் காட்டு பகுதி வழியாக வந்த போது கண்ணனை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
chennai police
ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட கண்ணனுக்கும் அதே ஊரை சேர்ந்த திருமணமான சொக்கம்மாள் (43) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சொக்கம்மாளின் மகன் விஜய் (23) தனது தாயையும், கண்ணணையும் கள்ளக்காதலை கைவிடுமாறு பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த விஜய் தாயின் கள்ளக்காதலனை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி விஜய் தனது நண்பர்களான மானாமதி பகுதியை சேர்த்த மகேந்திரன் (28) மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கபில் ஆனந்த் (26), விஷ்ணு (25), ராகுல் (21), நரசிம்மன் (26) ஆகியோர் சேர்ந்து கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.