ஆதாரத்தை காட்டுங்க... இல்லேனா ஜோவிகாவை வைத்தே கமல் மேல கேஸ் போடுவேன் - மிரட்டும் வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஜோவிகாவின் தாய் வனிதா விஜயகுமார், கமல் மீது வழக்கு தொடுப்பேன் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
vanitha, jovika
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன் முதல் வாரத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதுவும் கடந்த வாரம் பிரதீப்பால் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி வெளியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Jovika vijayakumar
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதன் பின்னணியில் சதி இருப்பதாகவும், மாயா, பூர்ணிமா, ஜோவிகா மற்றும் ஐஷூ ஆகியோரின் சூழ்ச்சியால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சாடி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வார எபிசோடு தொடங்கிய உடன் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியதும் ஜோவிகா தான் முதலில் பேசி இருந்தார். அப்போது தன் மகள் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசவே இல்லை என அவரது தாய் வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
jovika, Pradeep
இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய பொண்ணு Women safety பற்றி பேசவே இல்லை. முதல் வாரத்தில் இருந்தே பிரதீப்புக்கும் என் மகளுக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது. அன்றைய தினம் அனைத்து பெண்களும் பிரதீப் பற்றி தங்கள் கருத்தை முன்வைத்தபோது ஜோவிகாவும் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார் அவ்வளவுதான். ஆனால் அவள் பிளான் பண்ணி பிரதீப்பை வெளியேற்றிவிட்டதாக சிலர் வீடியோ பரப்பி வருகிறார்கள்.
vanitha daughter jovika
இது என் மகளின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதால், ரெட் கார்டு விஷயம் குறித்து இந்த வாரம் கமல் பேசியே ஆக வேண்டும் இல்லையென்றால் நானோ அல்லது என் மகளோ கமல் மீது வழக்கு தொடுப்போம் என எச்சரித்துள்ளார். இந்த விஷயத்தில் என் மகளின் பெயர் அதிகமாக அடிபடுகிறது. அவளுக்கு வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சரியாக விளக்கம் கொடுக்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் என வனிதா பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பிகிலுக்கு ஆப்பு வைத்தது முதல் பிரின்ஸை பதம் பார்த்தது வரை... கார்த்தியின் தீபாவளி சம்பவங்கள் ஒரு பார்வை