Bigg Boss: இப்படி பண்ணது அன் ஃபேர்! ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்க எனக்கு பிடிக்கல! அளப்பறையை ஆரம்பித்த அர்ச்சனா!
பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு போட்டியாளர்களாக வந்த, 5 போரையும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ் போட்டியாளர்கள் நாமினேஷனிலும் கோர்த்துவிட்ட நிலையில், தற்போது அர்ச்சனா தனக்கு ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என ப்ரோமோவில் கூறுகிறார்.
கடந்த 6 சீசன்களை விட 7-ஆவது சீசனில், பழிவாங்கும் படலம் அதிகமாகவே இருக்கிறது. பிரதீப், மாயா, பூர்ணிமா, விஷ்ணு ஆகியோர் சில போட்டியாளர்களை டார்கெட் செய்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்ட வழிவகை செய்து வருகிறார்கள்.
நேற்றைய தினம் கூட பிரதீப் ஸ்மால் வீட்டில் உள்ள தினேஷை டார்கெட் செய்து வெளியேற்றுவேன் என கூறியதும், மாயா அர்ச்சனாவை டார்கெட் செய்து இரண்டு வாரத்தில் வெளியே அனுப்புவேன் என கூறிய கட்சிகளும் இடம்பெற்றது. அதே போல் அர்ச்சனா, தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என நியாயமாக பேசியதை கூட, விசித்ரா ஒரு பிரச்சனையாக மாற்றினார்.
அர்ச்சனாவை ஒரு பக்கம் விசித்ரா பிக்பாஸ் ஹவுஸ் மேட்சிடம் திட்டு கொண்டிருந்த போது, அர்ச்சனா பாத் ரூம்மை கிளீஸ் செய்து கொண்டே விக்ரம் மற்றும் அக்ஷயாவிடம் அவர் மிகவும் ஸ்வீட் பர்சர் முத்தம் கொடுத்து அவரை சரி செய்து விடுவேன் என வெள்ளந்தித்தனமாக பேசி கொண்டிருந்தார். இது அவரின் எதார்த்த குணத்தை காட்டியது.
மேலும் இன்று நடக்கும், கேப்டன்ஸி டாஸ்கில் மாயா தான் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் வெற்றி பெற்றால் மீண்டும் வயல் கார்டு போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஒருவேளை மாயா தன்னுடைய பழிவாங்கும் உணர்ச்சியுடன் விளையாடினால் இவர் மீது கண்டிப்பாக மக்களுக்கு கோபம் அதிகரிக்கும் என்பது உறுதி.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், தனக்கு ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்க பிடிக்கவிலை என்பதை வெளிப்படையாக அர்ச்சனா பேசியுள்ளார். பிக்பாஸ் போட்டியாளர்கள் "நீ சோம்பேறி, போரிங் கண்டெஸ்டண்ட் என சொல்லி நம்மை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி இருந்தால், அது ஃபேர் கேம், ஆனால் வயல் கார்டாக வந்ததற்காக அனுப்பியது அன் ஃபேர் கேம் என கூறுகிறார். இதற்க்கு கானா பாலா நீ அங்கிருந்தால் என்ன பண்ணுவ என கேட்டபோது, அவங்களை போலவே இருந்திருப்பேன், பேசி இருப்பேன், விளையாடி இருப்பேன் என எதார்த்தமாக பேசிய பின்னர், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை என கூறுகிறார். எனினும் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D