பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனிக்கு இப்படி ஒரு மனநோய் இருக்கிறதா? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி தனக்கு இருக்கும் மனநோய் குறித்து பேசி இருக்கிறார்.
Pradeep Antony
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக்டோபர் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வாரமே சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிகளவில் பிரச்சனைகளில் சிக்கியது பிரதீப் ஆண்டனி தான். நடிகர் கவினி நண்பரான இவர் ஏற்கனவே ஒரு முறை கெஸ்ட் ஆக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து கவினுக்கு அறைவிட்டதெல்லாம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
vichitra, Pradeep Antony
இந்நிலையில், தற்போது அவரே போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இந்த சீசனில் சண்டைக்கோழியாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார் பிரதீப். முதல் வாரத்திலேயே விசித்ரா, விஜய் வர்மா, மாயா என பல போட்டியாளர்களிடம் சண்டைபோட்டு சர்ச்சைக்குரிய போட்டியாளராகவே தன்னை மக்கள் மத்தியில் பிரதீபலித்து வரும் பிரதீப் ஆண்டனி, நேற்று நடந்த டாஸ்க்கில் தனக்குள்ள மனநோய் குறித்து கூறி இருக்கிறார்.
Bigg Boss Contestant Pradeep Antony
பிக்பாஸ் வீட்டில் வார வாரம் டாஸ்க்குகள் வழங்கப்படுவது வழக்கம், அந்த வகையில் இந்த வாரம் பாப்புலாரிட்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இருவர் வந்து தங்களில் யாருக்கு பாப்புலாரிட்டி அதிகம் என்பதை விவாதிக்க வேண்டும். அவர்களின் விவாதத்தின் அடிப்படையில் மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து வாக்களித்து யார் வெற்றியாளர் என்பதை அறிவிப்பார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Pradeep Antony OCD problem
அந்த வகையில் பிரதீப் ஆண்டனியும், விஜய் வர்மாவும் இந்த பாப்புலாரிட்டி டாஸ்க்கில் மோதினர். இதில் பிரதீப் பேசுகையில், தான் பிக்பாஸுக்கு வரும் முன் தனது சோசியல் மீடியா பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டு வந்ததாக கூறினார். தனக்கு ஓசிடி இருப்பதால் தனக்கு வரும் request களை decline கொடுத்தால் தான் நிம்மதியா இருக்கும் என பேசி இருந்தார். இதன்மூலம் அவர் பிரதீப்புக்கு ஓசிடி எனும் மனநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதுமட்டுமின்றி அதுகுறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்து போவது தான் இந்த ஓசிடி. சமீபத்தில் மார்க் ஆண்டனி பட புரமோஷனின் போது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஓசிடி பிரச்சனை இருப்பதை விஷால் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பிரதீப் ஆண்டனியும் தனக்கு அந்த நோய் இருப்பதாக வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... விஜய்யின் கோட்டையில் திடீரென ரோட்ஷோ நடத்திய ரஜினிகாந்த்... சூப்பர்ஸ்டாரின் அலப்பறையான வீடியோ வைரல்