அம்மாவை எரித்து கொன்ற அப்பா..! அவரும் குடிச்சே செத்துட்டாரு.. பலரும் அறிந்திடாத பிரதீப் ஆண்டனியின் சோகக்கதை!
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரதீப் ஆண்டனி பற்றி பலரும் அறிந்திடாத அவரின் சோக கதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Kavin Friend Pradeep Antony:
பிரதீப் ஆண்டனி ஒரு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கவினின் நண்பராக உள்ளே வந்து, அவரை ஓங்கி அறைந்ததன் மூலம் பிரபலமானார். அப்போது, "நீ ஏன் உள்ள வந்த? அதை மறந்துட்டு இப்போ என்ன செஞ்சிட்டு இருக்க? என, தன்னுடைய நண்பன் மீதான அக்கறையுடன் பேசி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
Pradeep Antony Mind set:
பிரதீப் ஆண்டனி 1990 ஆம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய வாழ்க்கையில், பல கஷ்டங்களை பார்த்து வளர்ந்துள்ளதாலோ என்னவோ, இந்த வேலை... அந்த வேலை என பார்க்காமல் எந்த வேலையாக இருந்தாலும் செய்யவேண்டும் என்கிற மனோ பக்குவம் கொண்டவர். இதனால் பலமுறை, நான் என்ன பண்ணவேண்டும் என்பது எனக்கே தெரியவில்லை என்பதையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
School Toper:
பிரதீப் ஆண்டனியின் பள்ளி பருவத்தை பொறுத்தவரை, அவர் எப்போதுமே ஸ்கூல் டாப்பராகவே இருந்துள்ளார். மேலும் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு சட்டம் படிக்க வேண்டும் என்பது மிகவும் ஆசையாம். இதற்க்கு பணம் வேண்டும் என்பதால் தான் இந்த சீசனில் கலந்து கொண்டதாக இன்ட்ரோவிலேயே தெரிவித்தார் .
Pradeep Antony Education:
மேலும் இதற்கு முன்னர் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துள்ள பிரதீப், ஃபிலாசபியில் மாஸ்டர் படித்துள்ளார். இது தவிர சைக்காலஜி , கமியூனிக்கேஷன், போன்ற படிப்புகளை படித்துள்ளார். மேலும் தன்னைக்கு தோன்றும் வேலைகளையும் எந்த ஒரு தயக்கமும் இன்றி செய்துள்ளார்.
Biggboss Season 7 Pradeep Antony
குறிப்பாக பல ஓடிடி தளங்கள், மற்றும் FM போன்றவற்றியல் கன்டென்ட் ஹெட், கமியூனிக்கேஷன் ஹெட் போன்ற பணிகளை செய்துள்ளார். இவ்வளவு ஏன், மேல் மருவத்தூரில் ஸ்டேஷன் மாஸ்டராக கூட ஒரு மூன்று வருடம் வேலை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இவருக்கு புத்தம் படிப்பது, கேம் விளையாடுவதில் மிகவும் ஆர்வம். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு கேம் போன்று பார்க்கும் காரணத்தால் தான் இந்த நிகழ்ச்சியில் தன்னால் வெற்றிபெற முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் கலந்து கொண்டுள்ளார்.
Sad Life Story:
இவரின் சொந்த வாழ்க்கையை உற்று நோக்கினால், அது மிகவும் சோகம் நிறைந்த ஒன்றாக உள்ளது. இவரின் அம்மாவை அவரின் தந்தையே எரித்து கொன்று விட்டதாகவும், தந்தையும் அவரை கண்டு கொள்ளாமல் குடித்தே இரண்டு விட்டாராம். பின்னர் அவரின் சித்தி தான் இவரை வளர்த்துள்ளர். இதனை விஜய் வர்மாவிடம் பிரதீப் பிக்பாஸ் வீட்டிலேயே கூறியுள்ளார்.
Breaking: நடிகர் நாசரின் தந்தை காலமானார்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
Pradeep Love Story:
பிரதீபுக்கு சில காதல் கதைகளும் உள்ளதாம், ஒரு பெண் இவரை சுமார் 7 வருடங்கள் காதலித்து விட்டு பிரேக் அப் செய்து விட்டாராம், இன்னொரு பெண் மூன்று வருடம் காதலித்து பிரேக் அப் செய்து விட்டாராம். தற்போது ரிலேஷன் ஷிப் ஒன்றில் பிரதீப் இருக்கும் நிலையில், அவர் யார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. காதல், திருமண கனவு, படிப்பு ஆசை என பல் ஆசைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற வேண்டும் என பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள பிரதீப் நினைத்த விஷயத்தை செய்து முடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.