MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இனி தினேஷுடன் சேர வாய்ப்பே இல்லை... இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரச்சித்தா! மாப்பிள்ளை யார் தெரியுமா?

இனி தினேஷுடன் சேர வாய்ப்பே இல்லை... இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரச்சித்தா! மாப்பிள்ளை யார் தெரியுமா?

கணவர் தினேஷுடன் இனி வாழ போவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருக்கும் ரச்சித்தா மஹாலட்சுமி... இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், மாப்பிள்ளை குறித்த தகவல் ஒன்றும் கசிந்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 24 2024, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Actress Rachitha

Actress Rachitha

பெங்களூரை சேர்ந்த ரச்சித்தா , கன்னட சீரியல்களில் அறிமுகமாகி இருந்தாலும்... இவரை அரவணைத்து, அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது என்னவோ தமிழ் சீரியல்கள் தான். 2011 ஆம் ஆண்டு முதல் 2012 வரை, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் அறிமுகமான ரச்சித்தா மஹாலட்சுமி , இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் கோபாலசுவாமியை காதலிக்க துவங்கினார். 
 

26

இந்த சீரியலை அவர் நடித்து முடிந்த கையேடு 2013-ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த ரச்சித்தா மஹாலட்சுமி, இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், அம்மன் போன்ற ஏராளமான சீரியல்களில் நடித்தார்.

சன் டிவி 'கயல்' சீரியல் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்! திருமணத்திற்கு பின் கிடைத்த வாய்ப்புக்கு குவியும் வாழ்த்து

 

36

தமிழ் சீரியல்கள் மட்டும் இன்றி, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் சில தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தார். 
 

46

அதே போல் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர், 91 நாள் நின்று விளையாடிய நிலையில்... பின்னர் வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் ரச்சித்தா இருந்த போது கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்த தகவல் பேசுபொருளாக மாறியது.

Women Directors: சோதனைகளை கடந்து... தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை தூண்களாக மாறிய பெண் இயக்குனர்கள்!
 

56

ரச்சித்தா பிரிய நினைத்தாலும், தினேஷ் தன் மீதுள்ள தவறை உணர்ந்து அவருடன் மீண்டும் வாழ ஆசைப்பட்டதை...  சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு விளையாடிய போது பல முறை வெளிப்படுத்தினார். ஆனால் ரச்சித்தா தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

66

இந்நிலையில், ரச்சித்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் ஒன்று.... சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தினேஷிடம் இருந்து முறையாக விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், ரச்சித்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உள்ளதாகவும், அவர் பிரபல கன்னட இயக்குனர் ஒருவரை தான் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரச்சித்தா மற்றும் தினேஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகை விஜி சந்திரசேகரின் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்! சூர்யா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வாழ்த்து

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved