Bigg Boss Vichithra: விசித்ரா கொடுத்த ரேப் கன்டென்ட்... ட்விஸ்ட் பண்ணி லபோ திபோன்னு அடித்துக்கொள்ளும் மாயா!
எந்த ஒரு விஷயத்திற்கும் உடனே, ரியாக்ட் பண்ண வேண்டும். தாமதமாக ரியாக்ட் பண்ண கூடாது என்று விசித்ரா சொன்னதை, கேட்டு ஓவர் ரியாக்ட் செய்துள்ளார் மாயா.
பிக்பாஸ் வீட்டில் பிளான் பண்ணி பிரதீப்பை வெளியே துரத்திய மாயா - பூர்ணிமாவுக்கு எதிராக விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அர்ச்சனா மற்றும் தினேஷை பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மாயா அவர்கள் இருவரையும் மீண்டும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிய நிலையில், அழுமூஞ்சியாக இருந்த அர்ச்சனா இப்போது தான் தன்னுடைய ஃபயர் கேம்மை துவங்கியுள்ளார் என தெரிகிறது.
இந்த வாரம் விஷத்தன்மையோடு விளையாடும் பூர்ணிமாவை எப்படியும் வெளியே துரத்த வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் பிரதீப் விவகாரம் இன்னும் பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் புகைந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில், ஆரம்பத்தில் இருந்து பிரதீப் பேசிய அனைத்தையும் ஜாலியாக எடுத்து கொண்ட நீங்கள் ஏன் அப்போது ரியாக்ட் செய்யாமல், உரிமைக்குரல் எழுப்புகிறோம் என வேண்டும் என்றே பிளான் போட்டு பிரதீப்பின் வாழ்க்கையை அழித்து விட்டீர்கள் என விச்சிரா நியாமான கேள்விகளை முன் வைத்து வருகிறார். இதற்க்கு புல்லி கேங் மொத்தமும் கூடி, பேசியத்தையே திரும்ப திரும்ப பேசி வந்ததையும் பார்க்கமுடிந்தது.
ஸ்மால் பாஸ் வீட்டில் பேசிய விஷயங்களை, ரவீனா மூலம் தெரிந்து கொண்ட... பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஓவர் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஒரு வீடியோவில், ரேப் கமெண்ட் எல்லாம் பாஸ் பண்றங்க பிக்பாஸ், அதனால் என்னை, பூர்ணிமாவை, ஐஷுவை, ரவீனாவை, ஜோவிகாவை கன் ஃபெஷன் ரூமுக்கு அழைத்து பேசுங்கள் என லபோ திபோன்னு கத்தினார் மாயா.
Rashmika: இப்படி ஒரு விஷயத்தை கற்பனை செய்து கூட செய்யமுடியவில்லை! வேதனையோடு ராஷ்மிகா போட்ட பதிவு!
BB Tamil 7
இதுகுறித்து உண்மையில் என்ன தான் நடந்துள்ளது என்பது பற்றிய தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. எந்த பிரச்சனைக்கும் உடனே ரியாக்ட் பண்ண வேண்டும் என்பதை தான் ஒரு எடுத்துக்காட்டுடன் விசித்ரா கூறியுள்ளார். அதாவது "சில பெண்கள் ரேப் செய்யப்பட்டால், அதனை வெளியே சொல்ல தயங்கிக்கொண்டும், பயந்து கொண்டும் ஒரு மாதம், ஒரு வாரம் கழித்து தான் சொல்வார்கள். இப்படி தாமதமாக கூறுவதால், இதுபற்றி போலீசார் விசாரிப்பது மிகவும் கடினமாகிவிடும் என கூறி இருந்தார். இதனை அக்ஷயா ஏன் இப்படி பேசுறீங்க... உங்களின் எடுத்து காட்டு தவறாக இருக்கிறது என கேட்க விசித்ரா இது ஒரு அவார்னஸ் என தெரிவித்துள்ளார்.
விசித்ரா ரேப் கன்டென்டை கூட ஒரு விழிப்புணர்வாக தான் பயன்படுத்தி கூறியுள்ளார் என்பதால், கண்டிப்பாக இதுபோன்ற தகவல்கள் பல பெண்களை சென்றடைய வேண்டும் என, இவரின் இந்த பேச்சை வரவேற்றுள்ளனர். அதே நேரம் எதோ தவறாக பேசியது போல் சித்தரித்து, பிக்பாஸ் கேப்டன் முதல் மற்ற போட்டியாளர்கள் வரை இந்த விஷயத்திற்கு ஓவராக ரியாக்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D