டாஸ்கில் தோற்றதால் இழுத்து மூடப்பட்ட பெட் ரூம் கதவுகள்! எலிமினேட் பண்ணிடுங்க கொந்தளித்த கூல் சுரேஷ்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிக்பாஸ் வைத்த டாஸ்கில் தோற்றதால், பிக்பாஸ் பெட் ரூமில் கதவுகள் மூடப்படுகிறது. இது குறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த முறை மாயா கேப்டன்சியில் நடந்த பிரச்சனைகளுக்காக அவரை கமல் ஹாசன் வெளுத்து வாங்கினார். அதே நேரம், பிரதீப் ஆண்டனியை ஏன், தீர விசாரிக்கவில்லை என்பதற்கு அவர் கொடுத்த விளக்கும், யாராலும் ஏற்று கொள்ள முடியாததாகவே இருந்தது. அதே போல் பிரதீப் மீதான குற்றச்சாட்டுக்கு குறும்படம் போட்டு காட்டியும், ஏன் இதுகுறித்து அவர் ஒரு வார்த்தை கூட, மற்ற போட்டியாளர்களை கேட்கவில்லை என கேட்டார். ரெட் கார்டு கொடுத்ததற்கு நான் காரணம் அல்ல, போட்டியாளர்களான நீங்கள் தான் காரணம் என, கமல் இந்த விஷயத்தில் அந்தர் பல்டி அடித்துவிட்டதாகவே பலர் தங்களின் கருத்தை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து இந்த வாரம் கேப்டன்சி டாஸ்கில் தினேஷ் வெற்றி பெற்றார். முதல் நாளே இவரின் கேப்டன்சியில் தீபாவளி கொண்டாட்டம் கலை கட்டிய நிலையில், இன்றைய தினம் பிரச்சனைக்கு பெட்ரூமை சாத்தி பிள்ளையார் சுழி போட்டுள்ளார் பிக்பாஸ். இதுகுறித்து வெளியாகியுள்ள புரோமோவில், போட்டியாளர்களுக்கு மிகவும் கடினமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
கால் விரல்களால் மட்டுமே நின்றுகொண்டு, தலைக்கு மேல் இருக்கும் ஒரு கட்டையை போட்டியாளர்கள் பேலன்ஸ் செய்யவேண்டும் என கூறுகிறார் பிக்பாஸ். இந்த டாஸ்கில் நிக்சன், பூர்ணிமா, மாயா, மற்றும் பிராவோ ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். போட்டி துவங்கிய சில நொடிகளில் பேலன்ஸ் செய்ய முடியாமல் ஒருவரின் பின் ஒருவர் அவுட் ஆவதால், இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதாக அறிவிப்பு வெளியாகி பிக்பாஸ் பெட் ரூம் கதவுகள் சாத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் போட்டியாளர்கள் பெட்டி படுக்கையுடன் லிவிங் ஏரியாவில் வெளியே வருகின்றனர். ஸ்மால் ஹவுஸ் பெட்ரூமை நோக்கி போட்டியாளர்கள் செல்வதால், கூல் சுரேஷ் யாரையும் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளே அனுமதிக்க முடியாது என கூறுகிறார். என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என ஆவேசப்படுகிறார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. ஒரு கேப்டனாக இந்த சூழ்நிலையை தினேஷ் எப்படி கையாளுவார் என்பதும் மிகப்பெரிய கேள்வி குறியாக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D