Anouhska Ajith: அம்மாவை மிஞ்சிய அழகில் அஜித் மகள் அனோஷ்கா! சித்தியுடன் தீபாவளி கொண்டாடிய கலர் ஃபுல் போட்டோஸ்!
அஜித் மகள் அனோஷ்கா அம்மா, ஷாலினியை மிஞ்சிய அழகில்.. சித்தி ஷாமிலியுடன் தீபாவளி கொண்டாடிய கலர் ஃபுல் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தல அஜித், பிரபல நடிகை ஷாலினியை கடந்த 2000-ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த 'அமர்க்களம்' திரைப்படம் தான், இந்த அட்டகாசமான ஜோடியில் காதலுக்கு விதை போட்டது. பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இந்த ஜோடி, திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அஜித் - ஷாலினி தம்பதிக்கு கடந்த 2008-ம் ஆண்டு அனோஷ்கா என்கிற மகள் பிறந்தார். அனோஷ்காவிற்கு தற்போது 15 வயதாகும் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு தன்னுடைய தந்தை போலவே உயரமாகவும், அம்மாவையே பீட் பண்ணும் அழகிலும் சும்மா சினிமா ஹீரோயின் போல் ஜொலிக்கிறார். முன்பெல்லாம் அஜித் ஃபேமிலியின் குடும்ப புகைப்படத்தையே பார்ப்பது மிகவும் அரிது, ஆனால் சமீப காலமாக அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரின் புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி அன்று சித்தி ஷாமிலியுடன் அனோஷ்கா எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஷாலினி அனோஷ்காவுடன் எடுத்து கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் போட, அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அதே போல் ஷாலிமி தனியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் , மற்றும் அக்கா ஷாலினியுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அஜித் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்புக்காக கஜகஸ்தானில் உள்ளதால், இந்த ஆண்டு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடாமல், படப்பிடிப்பில் கொண்டாடியுள்ளார் என தெரிகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D