சிம்பிளாக நடந்துமுடிந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் காதல் திருமணம் - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகரின் காதல் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
akilan marriage
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பானது. இதையடுத்து கடந்தாண்டு நிறுத்தப்பட்ட உடனே அந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை தொடங்கினர். இருப்பினும் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்காத காரணத்தால், அதனை சில மாதங்களிலேயே நிறுத்திவிட்டனர்.
akilan love marriage
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த பிரபலங்கள் ஏராளமானோர் தற்போது சினிமாவில் வரிசையாக அறிமுகமாகி வருகின்றனர். அதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தற்போது சூரி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதேபோல் அந்த சீரியலில் நடித்த அகிலனும் விஷாலின் வீரமே வாகை சூடும், மாடர்ன் லவ் சென்னை போன்ற வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஜவான் பாடலுக்கு ஜாலியாக டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்... இதுலயும் அட்லீ கேமியோவா! வைரலாகும் ரீல்ஸ் வீடியோ
serial actor akilan wedding
தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அகிலனுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அக்ஷயா என்பவரை காதலித்து வந்த அகிலன், அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம்பிடித்து இருக்கிறார். இவர்களின் திருமணம் கோவிலில் சிம்பிளாக நடைபெற்று இருக்கிறது. அகிலன் - அக்ஷயா ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bharathi Kannamma akilan
அகிலன் - அக்ஷயா ஜோடியின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அதேபோல் பாரதி கண்ணம்மா சீரியலில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும் அகிலனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அகிலனின் வெட்டிங் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... எஸ்.ஏ.சி-க்கு ஆபரேஷன்... அப்பாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக வந்த தளபதி விஜய் - வைரலாகும் Photo