MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஹீரோயினாக அறிமுகமாகும் பேபி சாரா; அதுவும் பொன்னியின் செல்வன் நடிகருக்கு ஜோடியாக..! இயக்கப்போவது யார் தெரியுமா?

ஹீரோயினாக அறிமுகமாகும் பேபி சாரா; அதுவும் பொன்னியின் செல்வன் நடிகருக்கு ஜோடியாக..! இயக்கப்போவது யார் தெரியுமா?

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு தமிழ் படங்களில் கலக்கிய பேபி சாரா, தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம்.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2024, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sara Arjun

Sara Arjun

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. அப்படத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்தார் சாரா. அதில் அவர்கள் இருவருக்கும் இடையேயான தந்தை - மகள் உறவு அழகாக காட்டப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி கிளைமேக்ஸ் காட்சியில் இருவரும் வசனங்கள் இன்றி அன்பை பகிர்ந்து கொள்ளும் அந்த அழகிய தருணத்தை கண்டு கண்கலங்காதவர்களே இருக்க முடியாது.

24
baby sara

baby sara

அந்த அளவுக்கு சிறு வயதிலேயே தன்னுடைய நடிப்புத் திறமையால அசர வைத்தவர் சாரா. இதையடுத்து சைவம், சில்லுக் கருப்பட்டி போன்ற படங்களில் நடித்த அவர், கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆதித்த கரிகாலனுக்கு ஜோடியாக அவர் நடித்த காட்சிகள் கவித்துவமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

இதையும் படியுங்கள்... 17 வயதில் எல்லை மீறும் பேபி சாரா! கையில் சிகரெட்டுடன்.. குப்பு.. குப்புனு புகையை ஊதி தள்ளும் ஷாக்கிங் போட்டோஸ்

34
sana mariyan

sana mariyan

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்த கையோடு, அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதன்படி அவர் ஹீரோயினாக நடிக்கும் திரைப்படத்தை சனா மரியன் என்பவர் இயக்க உள்ளார். அவர் வேறுயாருமில்லை, தமிழில் 12பி, உள்ளம் கேட்குமே, தாம் தூம், உன்னாலே உன்னாலே போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த மறைந்த இயக்குனர் ஜீவாவின் மகள் தான். அவர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

44
sara arjun debut as heroine

sara arjun debut as heroine

இந்த திரைப்படத்தில் பேபி சாராவுக்கு ஜோடியாக சந்தோஷ் என்பவர் நடிக்க உள்ளார். அவர் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தவர். பொன்னியின் செல்வனில் இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் அவர்களை வைத்தே படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சனா மரியன்.

இதையும் படியுங்கள்... வயதான நடிகர்களை டார்கெட் செய்யும் திரிஷா.. சிரஞ்சீவியை தொடர்ந்து 63 வயது நடிகருடன் ஜோடி சேரும் தக் லைஃப் நாயகி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved