17 வயதில் எல்லை மீறும் பேபி சாரா! கையில் சிகரெட்டுடன்.. குப்பு.. குப்புனு புகையை ஊதி தள்ளும் ஷாக்கிங் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, பேபி சாரா 17 வயதிலேயே கையில் சிகரெட்டுடன், புகைபிடிப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், 2011 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வ திருமகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. இந்த படத்தில், நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்தார். அப்பா - மகள் பாசத்தை அற்புதமாக இயக்குனர் படமாக்கி இருந்ததாக இப்படம் விமர்சனம் ரீதியாக தொடர்ந்து பாராட்டுகளை பெற்றது.
அதே போல் பேபி சாராவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விஜய் அவார்ட்ஸ் போன்ற சில விருதுகளையும் வாங்கினார் பேபி சாரா.
இது உண்மையில் ஜோதிகாவா? நியூ லுக்கில் 20 வயசு பெண் போல் மாறிய ஜோ..! ஷாக்கிங் போட்டோஸ்!
இந்த படத்தை தொடர்ந்து, சித்திரையில் நிலா சோறு, சைவம், விழித்திரு போன்ற சில தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தமிழை தாண்டி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் சாரா.
குறிப்பாக, கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான... 'பொன்னியின் செல்வன்' படத்தில், நந்தினியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்யின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிபிடித்தக்கது.
சாரா தற்போது 17 வயதை எட்டிவிட்டதால், ஹீரோயின் கதையம்சம் மற்றும் துணிச்சலான வேடங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் அடுத்ததாக நடித்து வரும் 'கொட்டேஷன் கேங்' எனும் திரைப்படத்தில், பேபி சாரா சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி, பார்பவர்களையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. 17 வயதில் வரம்பு மீறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிலர் இந்த புகைப்படங்களுக்கு விமர்சனங்களும் செய்து வருகிறார்கள்.
சேலையில் அம்மா தேவயானியை மிஞ்சிய அழகு! கியூட் தேவதை போல் ஜொலிக்கும் மகள் இனியாவின் புகைப்படம் வைரல்!