Dharman : ரஜினிகாந்தின் ‘தர்மன்’ ரீமேக் படமா? லீக்கான கதை; ஷாக்கான ரசிகர்கள்
Dharman Movie Update : அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Dharman Movie Update
தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தர்மன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
மருத்துவராக நடிக்கும் ரஜினி
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களுடன் இப்படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, தர்மன் திரைப்படத்தின் கதை பிரபல ஜப்பானிய அனிமே தொடரான மான்ஸ்டர் தொடரைத் தழுவி உருவாக்கப்படுவதாக இணையத்தில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. உண்மையில் இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன தொடர்பு என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
பிரபல அனிமேஷன் தொடரின் கதையா தர்மன்?
ரஜினிகாந்தின் 173வது திரைப்படமாக உருவாகி வரும் தர்மன் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை வெளியான ஜப்பானிய அனிமே தொடரான மான்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் தர்மன் உருவாகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மான்ஸ்டர் தொடரின் மையக்கதையே ஒரு மருத்துவரைச் சுற்றித்தான் நகர்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மேயருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலில், அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு சிறுவனின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய நிலை அந்த மருத்துவருக்கு ஏற்படுகிறது.
இதில் மேயருக்குச் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாகச் சிறுவனைக் காப்பாற்ற மருத்துவர் முடிவெடுக்கிறார். இதன் விளைவாக மேயர் உயிரிழக்கிறார். ஆனால், அந்தச் சிறுவன் உயிர் பிழைத்து வளர்ந்த பிறகு பல்வேறு கொலைச் சம்பவங்களில் ஈடுபடுகிறான். இதனால், அவனைக் காப்பாற்றிய மருத்துவரின் வாழ்க்கையே எதிர்பாராத சிக்கல்களுக்குள் சிக்குகிறது. ஒரு மருத்துவர் சந்திக்கும் தார்மீகப் போராட்டங்களும், அதனால் உருவாகும் மர்மமான சம்பவங்களும்தான் மான்ஸ்டர் தொடரின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
தற்போது தர்மன் படத்திலும் ரஜினிகாந்த் மருத்துவராக நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல்களால், இந்த அனிமே தொடருடன் படத்தின் கதைக்கு ஒற்றுமை இருக்கலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இருப்பினும், தர்மன் திரைப்படம் மான்ஸ்டர் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதற்கு இதுவரை எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை. எனவே, இணையத்தில் பரவும் இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது படக்குழுவின் அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் தர்மன் படப்பிடிப்பு!
ஒருபுறம் படத்தின் கதைக்களம் குறித்த விவாதங்கள் இணையத்தில் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் தர்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தொடர்பான பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் இந்தப் படம் உண்மையிலேயே மான்ஸ்டர் அனிமே தொடரின் கதையைத் தழுவியதா அல்லது முற்றிலும் புதிய கதைக்களத்தைக் கொண்டிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.















