MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rajinikanth Movie Update : டிசம்பரில் ரிலீசாகும் சூப்பர்ஸ்டாரின் 'தர்மன்'! சென்னையில் சத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு!

Rajinikanth Movie Update : டிசம்பரில் ரிலீசாகும் சூப்பர்ஸ்டாரின் 'தர்மன்'! சென்னையில் சத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு!

Rajinikanth Movie Update : கமல்ஹாசனின் 'ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பிரமாண்டமான பாடல் காட்சியுடன் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 25 2026, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கலர்புல் கெட்அப்பில் ரஜினி
Image Credit : instagram

கலர்புல் கெட்அப்பில் ரஜினி

சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுத் தொடங்கியுள்ள முதற்கட்ட படப்பிடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் வண்ணமயமான (Colorful) கெட்அப்பில் கலந்துகொண்டு ஒரு அதிரடிப் பாடலுக்கு நடனமாடி வருகிறார். இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடல் காட்சியைத் தொடர்ந்து, ரஜினி பங்கேற்கும் அதிரடியான சண்டைக் காட்சிகளும், பின்னர் படத்தின் மற்ற முக்கிய காட்சிகளும் அடுத்தடுத்து படமாக்கப்பட உள்ளன. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முன்னணி நடிகை சிம்ரன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரிலீஸ் எப்போது?
Image Credit : X

ரிலீஸ் எப்போது?

படத்தின் வேலைகள் மிக வேகமாகத் திட்டமிடப்பட்டு நடந்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் தீவிரமாக உழைத்து வருகின்றனர். குறிப்பாக, வரும் டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக "தர்மன்" திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

34
கமலுக்கு 2 படங்கள் பண்ணும் ரஜினி!
Image Credit : our own

கமலுக்கு 2 படங்கள் பண்ணும் ரஜினி!

சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் பேசிய கமல்ஹாசன், "எனக்கு ரஜினிகாந்த் இரண்டு படங்கள் பண்ணுகிறார்" என்று வெளிப்படையாகக் கூறி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதில் முதல் படம் தான் தற்போது தொடங்கியிருக்கும் 'தர்மன்'. அப்படியானால் மற்றொரு படம் எது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இன்பன் உதயநிதி தயாரித்தாலும், அதில் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனமும் ஒரு பார்ட்னராக (இணை தயாரிப்பாளராக) இணைந்துள்ளது. இதன் மூலம் அந்தப் படத்திலிருந்து வரும் லாபத்திலும் கமலுக்குப் பங்கு உண்டு என்பதால், அதுவே ரஜினி குறிப்பிட்ட அந்த இரண்டாவது படம் என்று சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன. நெல்சன்-ரஜினி இணையும் இப்படம் அடுத்த ஆண்டு (2027) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் RO Water குடிக்கிறீர்களா? உங்கள் உடலில் நடக்கும் ஆபத்தான மாற்றங்கள்!

44
ரசிகர்களின் புதிய கோரிக்கை
Image Credit : X

ரசிகர்களின் புதிய கோரிக்கை

ரஜினிகாந்த் சமீபகாலமாகத் தொடர்ந்து ஆக்ஷன் ஜானர் படங்களிலேயே கவனம் செலுத்தி வருவதால், அவர் தனது வழக்கமான பாணியை மாற்றி வேறு ஜானரிலும் நடிக்க வேண்டும் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில், குடும்பக் கதையாகவோ அல்லது 'சந்திரமுகி' போன்ற பேமிலி என்டர்டெய்னர் படங்களிலோ அவர் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது! சாதாரண மனிதனை கோடீஸ்வரனாக்கும் 70/30 விதி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Related Stories
Recommended image1
Rajini - Kamal: ரஜினி - கமல் இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved