MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dharman : இது ரஜினியா இல்ல பிரதீப்பா? என்னய்யா பண்ணிவச்சிருக்கீங்க? ட்ரோலில் சிக்கிய தலைவர் 173 பட போஸ்டர்

Dharman : இது ரஜினியா இல்ல பிரதீப்பா? என்னய்யா பண்ணிவச்சிருக்கீங்க? ட்ரோலில் சிக்கிய தலைவர் 173 பட போஸ்டர்

Thalaivar 173 Movie Title : கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 24 2026, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Thalaivar 173 Movie Titled as Dharman
Image Credit : X

Thalaivar 173 Movie Titled as Dharman

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கூலி. கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து அவர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிக்க உள்ளனர். இதுதவிர கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் ரஜினி. பிரம்மாண்டமாக உருவாகும் அப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இயக்குநர்கள் மாற்றம்
Image Credit : X

இயக்குநர்கள் மாற்றம்

தலைவர் 173 திரைப்படத்தை முதன்முதலில் இயக்க கமிட்டானது சுந்தர் சி தான். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படம் குறித்த அறிவிப்பும் வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் அப்படத்தில் இருந்து விலகினார் சுந்தர் சி. கதையில் திருப்தி இல்லாததால், ரஜினி அப்படத்தில் நடிக்க மறுத்ததாக பேச்சு அடிபட்டது. பின்னர் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, தலைவர் 173 படத்தை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தனர்.

Related Articles

Related image1
தலைவர் 173 முதல் ராக்கா வரை... பான் இந்தியா படங்களால் நிரம்பி வழியும் 2027; க்யூவில் நிற்கும் 5 படங்கள்
Related image2
சூப்பர்ஸ்டாரின் ‘தலைவர் 173’ இயக்குனர் மீண்டும் மாற்றமா? வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ராஜ்கமல் நிறுவனம்!
35
அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்
Image Credit : X

அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்

ஆனால் சில மாதங்களில் சிபி சக்கரவர்த்தியும் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் தலைவர் 173 படம் டிராப் என பேச்சு அடிபட்டது. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது தலைவர் 173 படத்தின் டைட்டில் உடன் அதை இயக்க உள்ள இயக்குநர் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதன்படி தலைவர் 173 திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் இதற்கு முன்னர் ஓ மை கடவுளே, பிரதீப் ரங்கநாதனின் டிராகன் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

45
டைட்டில் என்ன?
Image Credit : X

டைட்டில் என்ன?

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் அவர் முதன்முறையாக இயக்க உள்ள படத்திற்கு தர்மன் என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஸ்டண்ட் பணிகளை அன்பறிவு மேற்கொள்ள உள்ளனர். மேலும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இப்படத்திற்கு நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரதீப் ராகவ் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

55
ட்ரோலில் சிக்கிய போஸ்டர்
Image Credit : X

ட்ரோலில் சிக்கிய போஸ்டர்

தர்மன் படத்தின் டைட்டில் உடன் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த் சிகப்பு நிற சட்டை மற்றும் ஃபேண்ட் உடன் காட்சியளிக்கிறார். அதில் அவரது உடலுக்கும் தலைக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருப்பதாக நெட்டிசன்கள் சாடுகின்றனர். ஒரு சிலரோ இது ரஜினியா இல்லை பிரதீப்பா என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் இது ஒரிஜினல் போட்டோவா இல்லை ஏஐ போட்டோவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தலைவர் 173

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha House: அரண்மனை மாதிரி ஒரு வீடு... சமந்தாவின் ஹோம் டூர் போட்டோஸ்!
Recommended image2
CM Vijay: "அண்ணே... பெட்ரோல் போடவாவது காசு இருக்கா?!" ரூ.2 லட்சம் சம்பளத்தில் ‘பட்ஜெட்’ பத்மநாபனான சிஎம் விஜய்!
Recommended image3
Pandian Stores 2 : லஞ்சம் வாங்குறீங்களா? மீனா கேட்ட கேள்வியால் ஆடிப்போன செந்தில் - பணத்தால் வெடிக்கும் பிரச்சனை
Related Stories
Recommended image1
தலைவர் 173 முதல் ராக்கா வரை... பான் இந்தியா படங்களால் நிரம்பி வழியும் 2027; க்யூவில் நிற்கும் 5 படங்கள்
Recommended image2
சூப்பர்ஸ்டாரின் ‘தலைவர் 173’ இயக்குனர் மீண்டும் மாற்றமா? வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ராஜ்கமல் நிறுவனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved