MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தலைவர் 173 முதல் ராக்கா வரை... பான் இந்தியா படங்களால் நிரம்பி வழியும் 2027; க்யூவில் நிற்கும் 5 படங்கள்

தலைவர் 173 முதல் ராக்கா வரை... பான் இந்தியா படங்களால் நிரம்பி வழியும் 2027; க்யூவில் நிற்கும் 5 படங்கள்

2026-ம் ஆண்டைக் காட்டிலும் 2027-ம் ஆண்டு தான் ஏராளமான பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 22 2026, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Upcoming Pan India Movies
Image Credit : X

Upcoming Pan India Movies

2026ம் ஆண்டு இன்னும் பாதி கூட முடியவில்லை. அதற்குள் 2027-ம் ஆண்டு வெளியீட்டிற்கு பிரம்மாண்ட படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. அந்த பட்டியலில் சூப்ப்ர்ஸ்டார் ரஜினிகாந்த் படம், அல்லு அர்ஜுன் படம், ஜூனியர் என்.டி.ஆர் படம், பிரபாஸ் படம், யாஷ் படம், ராஜமெளலி படம் ஆகியவை உள்ளன. அந்த படங்கள் என்னென்ன? அவை எந்தெந்த தேதியில் திரைக்கு வர உள்ளன? என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

27
தலைவர் 173
Image Credit : X / Raaj Kamal Films International

தலைவர் 173

2027-ம் ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள முதல் பிரம்மாண்ட படம் தலைவர் 173. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தார். பின்னர் அவர் விலகியதால் அப்படம் சிபி சக்கரவர்த்தி வசம் சென்றது. தற்போது அவரும் அதிலிருந்து விலகியதாக செய்தி வந்ததால், அஸ்வத் மாரிமுத்து இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

Related Articles

Related image1
புஷ்பா 3 முதல் ராக்கா வரை.... அல்லு அர்ஜுன் கைவசம் உள்ள அரை டஜன் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Related image2
தலைவர் 173 படத்தில் இருந்து தெறித்து ஓடும் இயக்குனர்கள் - காரணம் இதுவா?
37
ஸ்பிரிட்
Image Credit : X

ஸ்பிரிட்

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஸ்பிரிட். இப்படத்தை சர்ச்சைக்குரிய இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களை இயக்கியவர். இப்படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் தென்கொரிய நடிகர் வில்லனாக நடிக்கிறார். இப்படம் 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

47
வாரணாசி
Image Credit : Instagram

வாரணாசி

2027-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ராஜமெளலியின் வாரணாசியும் ஒன்று. இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதன் படப்பிடிப்பு ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதியாகி உள்ளது. அதன்படி 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி வாரணாசி திரைப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

57
டிராகன்
Image Credit : instagram

டிராகன்

கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் டிராகன். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார். ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கும் இப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. இப்படத்தையும் 2027-ம் ஆண்டு தான் ரிலீஸ் செய்ய உள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 11ந் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

67
ராக்கா
Image Credit : X

ராக்கா

2027-ம் ஆண்டு ரிலீஸ் ஆகும் பிரம்மாண்ட படங்களின் பட்டியலில் அல்லு அர்ஜுனின் ராக்கா படமும் உள்ளது. ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் இப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தையும் 2027-ம் ஆண்டு தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

77
ராமாயணா 2
Image Credit : Youtube@WorldOfRamayana

ராமாயணா 2

இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான் இந்தியா படம் தான் ராமாயணா. இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். மேலும் யாஷ், சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாரணாசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிரியாணிக்கு No சொல்லி உப்பு சப்பில்லாமல் சாப்பிடும் STR.! சிம்பு சைவத்திற்கு மாறியதன் ரகசியம் தெரியுமா?
Recommended image2
முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
Recommended image3
Music: என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
Related Stories
Recommended image1
புஷ்பா 3 முதல் ராக்கா வரை.... அல்லு அர்ஜுன் கைவசம் உள்ள அரை டஜன் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
தலைவர் 173 படத்தில் இருந்து தெறித்து ஓடும் இயக்குனர்கள் - காரணம் இதுவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved