MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தலைவர் 173 படத்தில் இருந்து தெறித்து ஓடும் இயக்குனர்கள் - காரணம் இதுவா?

தலைவர் 173 படத்தில் இருந்து தெறித்து ஓடும் இயக்குனர்கள் - காரணம் இதுவா?

Rajinikanth 173: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 173-ஆவது படத்தின் இயக்குனர் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் நிலையில், இதன் காரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 14 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரஜினி 173 திரைப்படம்:
Image Credit : instagram

ரஜினி 173 திரைப்படம்:

ரஜினி 173 திரைப்படம்: கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் “ தலைவர் 173” படம் மீது ஆரம்பம் முதலே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே போல் படம் இன்னும் தொடக்கநிலையிலேயே இருந்தாலும், அதனைச் சுற்றி நடக்கும் மாற்றங்கள் தொடர்ந்து பேசு பொருளாக உள்ளது.

26
சுந்தர் சி விலகல்:
Image Credit : our own

சுந்தர் சி விலகல்:

இந்த படத்தை முதலில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக கூறப்பட்டது. வணிக ரீதியாக ஹிட் கொடுக்க கூடிய இயக்குனர் என்பதை தாண்டி, ரசிகர்களை கவரும் படங்களை இயக்கும் அனுபவம் கொண்டவர் என்பதால், இந்த கூட்டணி தெறி மாஸாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியது. இந்த முடிவுக்கான காரணம் வெளிவராததால், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி உருவானது.

36
உள்ளே வந்த சிபி சக்கரவர்த்தி:
Image Credit : our own

உள்ளே வந்த சிபி சக்கரவர்த்தி:

சுந்தர் சி -யின் வெளியேற்றத்தை தொடர்ந்து, இயக்குநராக சிபி சக்கரவர்த்தி, இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இளம் தலைமுறை ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் இவர் என்பதால்... பெயர் முன்வந்தது. இளம் தலைமுறையினரிடம் கண்டிப்பாக இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக அமையும் என சினிமா வட்டாரத்தை சேர்த்தவர்கள் தங்களின் கருத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

46
திடீர் வெளியேற்றம்:
Image Credit : our own

திடீர் வெளியேற்றம்:

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, சிபி சக்ரவர்த்தியும் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் இயக்குநர் தேர்வு இன்னும் உறுதியாகவில்லை என்ற எண்ணம் பலரிடமும் உருவாகியுள்ளது. ஒரே படத்திற்கு இவ்வளவு மாற்றங்கள் நடப்பதன் காரணம் என்ன என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

56
அஸ்வந்த் மாரிமுத்து:
Image Credit : Google

அஸ்வந்த் மாரிமுத்து:

இந்த படம் குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, தற்போது இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து தான், தலைவரின் 173-ஆவது படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான, படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்பதால்... புதிய அணுகுமுறையோடு இவர் இந்த படத்தையும் இயக்க கூடும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

66
மாற்றத்தின் காரணம் இதுவா?
Image Credit : X

மாற்றத்தின் காரணம் இதுவா?

தொடர்ந்து இந்த படத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம், இந்த படத்தில் தயாரிப்பாளர் கமல்ஹாசன் தான் என சினிமா வட்டாரங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அவர் போடும் கண்டிஷன்கள் காரணமாகவே இந்த மாற்றம் நடந்து வருகிறதாம். ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்தும் மாற்றங்கள் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: தங்கமயிலால் வந்த சண்டை.. செந்திலை வீட்டை விட்டு துரத்திய மீனா! இன்றைய எபிசோட் அப்டேட்!
Recommended image2
மிருணாள் தாகூர் திருமணம் - ஆசையை சொன்ன தயாரிப்பாளர்! வெட்கத்தில் முகம் சிவந்த நடிகை!
Recommended image3
'ஜனநாயகன்' லீக் - நஷ்டத்தை ஈடுகட்ட தளபதி விஜய் எடுத்த முடிவால் - ஆடி போன ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved