MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூப்பர்ஸ்டாரின் ‘தலைவர் 173’ இயக்குனர் மீண்டும் மாற்றமா? வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ராஜ்கமல் நிறுவனம்!

சூப்பர்ஸ்டாரின் ‘தலைவர் 173’ இயக்குனர் மீண்டும் மாற்றமா? வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ராஜ்கமல் நிறுவனம்!

கமல்ஹாசனின் RKFI தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குனர் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 02 2026, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஹாட் டாபிக்
Image Credit : X

ஹாட் டாபிக்

கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் என்றால் அது கமல்ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (RKFI) தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 173’ திரைப்படம் தான். தொடர் திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இப்படத்தின் இயக்குனர் தேர்வு மற்றும் புதிய கூட்டணி குறித்த சுவாரசியமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மாறிக்கொண்டே இருக்கும் ‘தலைவர் 173’ இயக்குனர்கள்
Image Credit : X / Raaj Kamal Films International

மாறிக்கொண்டே இருக்கும் ‘தலைவர் 173’ இயக்குனர்கள்

‘தலைவர் 173’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இயக்குனர் நாற்காலியில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. முதலில் இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார்.

அவருக்குப் பின், சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்ளே வந்தார். ரஜினிகாந்தின் 83 விதமான கெட்-அப்களை வடிவமைப்பது வரை ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்தன. ஆனால், சமீபத்திய சினிமா வட்டார தகவல்களின்படி, ரஜினிகாந்த் கதையில் சில மாற்றங்களை செய்யக் கோரியதாகவும், அதில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சிபி சக்கரவர்த்தியும் இப்படத்திலிருந்து விலகியதாகவோ அல்லது அவருக்குப் பதிலாக வேறு இயக்குனர் பரிசீலிக்கப்படுவதாகவோ செய்திகள் வெளியாகி வந்தன.

Related Articles

Related image1
தலைவர் 173 முதல் ராக்கா வரை... பான் இந்தியா படங்களால் நிரம்பி வழியும் 2027; க்யூவில் நிற்கும் 5 படங்கள்
Related image2
தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது ஏன்..? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த கமல்
34
உள்ளே வருகிறாரா அஸ்வத் மாரிமுத்து?
Image Credit : X

உள்ளே வருகிறாரா அஸ்வத் மாரிமுத்து?

சிபி சக்கரவர்த்தியின் விலகல் வதந்திகளுக்கு மத்தியில், ‘ஓ மை கடவுளே’ மற்றும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ‘டிராகன்’ படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, ‘தலைவர் 173’ படத்தை இயக்கப் போவதாக பரவலாக பேசப்பட்டது. அவர் ராஜ் கமல் நிறுவனத்தை அணுகி கதை சொல்லியிருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது சிம்புவின் ‘STR 51’ (காட் ஆப் லவ்) படத்தை இயக்க கமிட் ஆகியிருக்கும் அஸ்வத், ரஜினி படத்தையும் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

44
ராஜ் கமல் பிலிம்ஸின் சர்ப்ரைஸ் வீடியோ
Image Credit : CHATGPT

ராஜ் கமல் பிலிம்ஸின் சர்ப்ரைஸ் வீடியோ

இந்த வதந்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு சுவாரசியமான சம்பவம் இன்று நடந்துள்ளது. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்துகளைக் குவித்து வரும் வேளையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raaj Kamal Films International (@rkfioffl)

இன்னும் அதிகாரப்பூர்வமாக படம் எதையும் இயக்க ஒப்பந்தம் ஆகாத ஒரு இளம் இயக்குனருக்கு, கமலின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவிப்பது சாதாரண விஷயம் அல்ல என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

இந்த வீடியோ வெளியானது முதல், ‘தலைவர் 173’ படத்தின் புதிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். சுந்தர் சி, சிபி சக்கரவர்த்தியைத் தொடர்ந்து இப்போது அஸ்வத் மாரிமுத்து கைகளுக்கு ‘தலைவர் 173’ சென்றுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
தலைவர் 173
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : மேஸ்ட்ரோ மேஜிக்... சவாலான ராகங்களிலும் புகுந்து விளையாடி இளையராஜா கொடுத்த அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?
Recommended image2
Ilayaraja: இசை உலகின் பொற்கால கூட்டணி! இளையராஜா – எஸ்.பி.பி இணைந்து படைத்த சாதனைகள் தெரியுமா?!
Recommended image3
Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்
Related Stories
Recommended image1
தலைவர் 173 முதல் ராக்கா வரை... பான் இந்தியா படங்களால் நிரம்பி வழியும் 2027; க்யூவில் நிற்கும் 5 படங்கள்
Recommended image2
தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது ஏன்..? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த கமல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved