ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கல்லூரி விழாவை களைகட்ட செய்த நயன்தாரா! போட்டோஸ்..
நடிகை நயன்தாரா கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை தவிர்க்கும் நிலையில், தற்போது கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
வைல்ட் நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில், கொண்டை போட்டு... அதில் மல்லி பூ வைத்து, கண்கவர் அழகில் தேவதை போல் மிளிரும் அழகில் தான் இந்த கல்லூரி விழாவில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா. இவரின் இந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் உள்ள சத்யபாமா யூனிவர்சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில் தான், நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.சத்யபாமா யூனிவர்சிட்டி தன்னுடைய 35 ஆம் ஆண்டு வெற்றிவிழாவை கொண்டாடுகிறது. இந்த யூனிவெர்சிட்டியின் அம்பாசிடராக நடிகை நயன்தாரா உள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்குள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
அப்போது பேசிய நயன்தாரா லைப்ல எப்போதுமே ஹாப்பியா இருங்க. ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுக்காதீங்க.. எப்படி இருந்தாலும், எல்லாரும் லைப்ல சக்ஸஸ் ஃபுல்லா இருப்பீங்க, அந்த சக்ஸஸ் நாளைக்கு வரும் போது, அன்று வருத்தப்பட்ட நேரங்கள் குறித்து கவலை கொள்வீர்கள் என பேசியுள்ளார்.
சேலையில் அம்மா தேவயானியை மிஞ்சிய அழகு! கியூட் தேவதை போல் ஜொலிக்கும் மகள் இனியாவின் புகைப்படம் வைரல்!
தமிழ் சினிமாவில் பல சவால்களை கலந்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, கல்லூரி விழாவில் இப்படி பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது என்றே கூறலாம்.
பொதுவாக பட விழாக்களில் கூட கலந்து கொள்ளாத நயன், நீண்ட இடைவெளிக்கு பின்னை இது போன்ற பேசிய விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ள, இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு நடந்த திருமணம்..! வைரலாகும் அழகிய ஜோடிகளின் புகைப்படம்..!
நயன்தாரா கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆன 4 மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையையும் பெற்றெடுத்தார்.
அவ்வப்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வரும் நயன்தாரா, கோலிவுட் திரையுலகை தாண்டி... போவுட்டிலும் கால் பதித்துள்ளார். பாலிவுட் கிங் காங் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக பதான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.