MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வயதான நடிகர்களை டார்கெட் செய்யும் திரிஷா.. சிரஞ்சீவியை தொடர்ந்து 63 வயது நடிகருடன் ஜோடி சேரும் தக் லைஃப் நாயகி

வயதான நடிகர்களை டார்கெட் செய்யும் திரிஷா.. சிரஞ்சீவியை தொடர்ந்து 63 வயது நடிகருடன் ஜோடி சேரும் தக் லைஃப் நாயகி

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தற்போது 63 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2024, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha

Trisha

கோலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி ஹீரோயினாக கோலோச்சி வருபவர் திரிஷா. மெளனம் பேசியதே படத்தில் தொடங்கிய இவரது பயணம், இன்று டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. 40 வயதாகிவிட்டாலும் நடிகை திரிஷாவுக்கு மவுசு குறையவில்லை. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கிறார் திரிஷா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Trisha Krishnan

Trisha Krishnan

அவர் தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இதுதவிர மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் திரிஷா. இதன் ஷூட்டிங்கும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் மற்றும் டோவினோ தாமஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் திரிஷா.

இதையும் படியுங்கள்... 40 வயதிலும் சிங்கிள் & யங் ஆக இருக்கும் தக் லைஃப் நாயகி திரிஷாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா?

34
Trisha New Movie

Trisha New Movie

தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார் திரிஷா. அதன்படி சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் திரிஷா. இவர்கள் இருவரும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு விஸ்வம்பரா என பெயரிடப்பட்டு உள்ளது. வசிஷ்டா என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பும் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

44
Daggubati Venkatesh

Daggubati Venkatesh

வரிசையாக கமல்ஹாசன், மோகன்லால், சிரஞ்சீவி என வயதான நடிகர்களுடன் நடித்து வரும் திரிஷா, தற்போது மேலும் ஒரு வயதான ஹீரோவுடன் ஜோடி சேர உள்ளார். அவர் வேறு யாருமில்லை. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் வெங்கடேஷ் தான். 63 வயதாகும் வெங்கடேஷுக்கு ஜோடியாக ஏற்கனவே நாம்ப் வெங்கடேஷா, அடவாரி மடலகு அர்த்தலே வெருலு போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா, தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளாராம். இப்படத்தை அனில் ரவிப்புடி இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் அளித்த பரபரப்பு புகார்... கைதாகிறாரா பயில்வான் ரங்கநாதன்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தக் லைஃப்
திரிஷா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved