Amir And Pavni: கல்யாணதுக்கு முன்பே செம்ம பிளான்.! புது கார் வாங்கிய அமீர் - பாவனி ஜோடி.. வைரலாகும் போட்டோஸ்!
பிக்பாஸ் மூலம், ரியல் ஜோடியாக மாறிய அமீர் - பாவனி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.
Pavni Amir Love
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை ஒரு, கண்டெண்டாக மட்டுமே பயன்படுத்திய சிலர் மத்தியில், தைரியமாக காதலை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியது மட்டும் இன்றி, விடாமல் தூரத்தை பாவனியை காதலிக்க வைத்தவர் அமீர்.
Biggboss Season 5 Contestant:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி-யிடம் வயல் கார்டு போட்டியாளராக வந்து அமீர் காதலை கூறிய போதும், அதனை பாவனி நிராகரித்தது ஒரு கண்டெண்டாகவே பார்க்கப்பட்டாலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க துவங்கினர்.
Thunivu movie:
பின்னர் இருவரும் ஜோடியாக இணைந்து துணிவு படத்திலும் 3 நிமிட காட்சியில் நடித்து அசத்தி இருந்தனர். இதை தொடர்ந்து பாவனி ஒரு பக்கம் திரைப்படத்தில் கவனம் செலுத்த, அமீரும் தன்னுடைய நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
Amir Pavni live Together
அமீர் - பாவனி ஜோடி தற்போது சென்னையில் ஒரே வீட்டில், லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது இருவரும் ஒன்றாக, எடுத்து கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Amir and pavni Buy a new car
மேலும் அடுத்த வருடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இருவரும் இணைந்து... புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் புது கார் வாங்கிய லவ் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.