அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தன்னுடைய வெறித்தனமான ரசிகனுக்கு வழங்கிய அஜித்... ஏகே 63 பட இயக்குனர் இவரா?
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்ததாக ஏகே 63 பட வாய்ப்பை இளம் இயக்குனருக்கு வழங்கி உள்ளாராம்.
Ajith
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
Ajith, Aadhik
இந்த நிலையில், நடிகர் அஜித் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி அஜித்தின் 63-வது திரைப்படத்தை விடுதலை படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார். இப்படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னர் த்ரிஷா இல்லேனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
AK 63 director Aadhik Ravichandran
ஏகே 63 பட இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன் வெறித்தனமான அஜித் ரசிகர். இவர் இதற்கு முன்னர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். அப்பட ஷூட்டிங்கின்போது தான் அஜித் இவருக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தாராம். குறிப்பாக பெரிய நடிகர்களுடன் இணைந்து படம் பண்ண சொல்லி அவருக்கு உத்வேகம் அளித்ததே அஜித் தானாம். அதன் பின்னர் தான் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை எடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி உடன் கூறினார்.
Aadhik Ravichandran
அஜித்தின் வெறித்தனமான ஃபேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் கூட்டணி அமைக்க உள்ள தகவல் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. மேலும் இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இப்படம் குறித்த அப்டேட் விடாமுயற்சி பட ரிலீசுக்கு பின்னரே வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... காவாலா டான்ஸுக்கு பின் கிடைத்த கெளரவம்... ஜப்பான் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதராக தமன்னா நியமனம்