- Home
- Gallery
- Aditi Shankar: 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்சில் Ragged லுக்கில் ஆட்டம்.. படத்தில்.. பின்னி பெடல் எடுத்த அதிதி!
Aditi Shankar: 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்சில் Ragged லுக்கில் ஆட்டம்.. படத்தில்.. பின்னி பெடல் எடுத்த அதிதி!
இயக்குனர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர், இந்தியன் 2 படவிழாவில் ஆட்டம்... பாட்டம் என நிகழ்ச்சியை களைகட்ட வைத்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் யாருமே எதிர்பாராத நேரத்தில், அதிரடியாக ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர்... பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.
தன்னுடைய MBBS படிப்பை முடித்த கையேடு, சிறு வயதில் இருந்தே நடிப்பின் ஆர்வம் இருந்ததால் நடிக்க வந்ததாகும் கூறிய அதிதி, முதல் படத்திலேயே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி, முதல் படத்திலேயே 'கஞ்சா பூ கண்ணால' என்கிற பாடலை பாடி இருந்தார்.
ஏற்கனவே இந்த பாடலை, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியை வைத்து ரெக்கார்டிங் செய்த நிலையில்... அதிதிக்காக பாடலை நீக்கி விட்டு, அவரை பாட வைத்ததாக ராஜ லட்சுமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்த அதிதி, அந்த படத்திலும் தன்னுடைய சொந்த குரலில் பாடி பட்டையை கிளப்பினார்.
விஜய் எப்படி சமீக காலமாக தன்னுடைய சொந்த குரலில் அவர் நடிக்கும் படங்களில் பாடல் பாடுகிறாரோ... அதே ட்ரெண்டை அதிதியும் கடைபிடித்து வருவதாகவே பார்க்கப்படுகிறது.
ஆனந்த் அம்பானியை விட... வயதில் மூத்தவரா ராதிகா மெர்ச்சண்ட்? எத்தனை வயசு வித்தியாசம் தெரியுமா?
தற்போது இவர், விஜய்யின் மகன் இயக்க உள்ள படம் மற்றும் முரளியின் இளையமகன் ஆகாஷ் நடிக்கும் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஓரிரு படங்களிலே முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்து விட்ட அதிதி தற்போது தன்னுடைய அப்பாவின் பட விழாவில் செம்மையாக ஆட்டம் போட்டுள்ளார்.
இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் அதிதி Ragged லுக்கில் தன்னுடைய தம்பி ஆர்ஜித்துடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார். இதுற்குறித்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.